• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கட்டெறும்பு" கடிச்சிடுச்சே.. ஸ்டாலின் சொன்னது ஞாபகம் இருக்கா.. கொஞ்சநஞ்ச பேச்சா பேசினாரு ரா.பாலாஜி

Google Oneindia Tamil News

திருச்சி: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மீண்டும் ஒரு புகார் தரப்பட்டுள்ளது.. அரசு வழக்கறிஞர் ஒருவர் இந்த புகாரை போலீசில் தந்துள்ளார்.

கடந்த முறை அதிமுக ஆட்சியில், திமுகவை அளவுக்கு அதிகமாக விமர்சித்தது ராஜேந்திர பாலாஜிதான்.. எடப்பாடி பழனிசாமிகூட, ஸ்டாலினை இந்த அளவுக்கு திட்டியதில்லை.. விமர்சித்ததும் இல்லை..

அமைச்சராக இருந்தபோது, ராஜேந்திர பாலாஜி எப்போதெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறாரோ, அந்த வீடியோக்கள் அத்தனையும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வைரலாவதுண்டு.. காரணம் அவைகள் அனைத்திலுமே வார்த்தைகளின் எல்லைகள் மீறப்பட்டிருந்தன.

 வழக்குகளில் இருந்து விடுபட ராஜேந்திர பாலாஜி பரிகாரம்..திருபுவனம் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா? வழக்குகளில் இருந்து விடுபட ராஜேந்திர பாலாஜி பரிகாரம்..திருபுவனம் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா?

 வறுத்தெடுத்தார்

வறுத்தெடுத்தார்

அபரிமிதமான அரசியல் அனுபவத்தை பெற்ற முதல்வர் ஸ்டாலினை, இவர் அளவுக்கு யாருமே ஒருமையில் பேசி, இதுவரை சவால் விட்டதில்லை.. அதைவிட கொடுமை, ராஜேந்திர பாலாஜி அப்போது பேசிய பேச்சுக்களுக்கெல்லாம் அதிமுக தலைமை எந்தவிதமான வருத்தமும் தெரிவிக்கவில்லை... ஆனாலும், கடந்த தேர்தலின்போது ராஜபாளையம் பிரச்சாரத்தில் ஸ்டாலின் இவரை வறுத்தெடுத்துவிட்டார்.

 பஃபூன் ரவுடி

பஃபூன் ரவுடி

"ரவுடித்துறை அமைச்சர்.. பபூன் ரவுடி.. அவரை பார்த்தாலே பபூன் ஞாபகம் தான் வருது.. நான் எங்க போனாலும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு கேப்பேன்.. ஆனால் முதன்முதலாக ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப்போடக் கூடாதுன்னு சொல்லி வாக்கு கேக்கறேன்.. ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால், இவரெல்லாம் அதிமுகவிலேயே இருந்திருக்க மாட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும், அவர் மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை வேகப்படுத்தி, உண்மையை வெளிக்கொண்டுவந்து, அவரை ஜெயிலுக்கு அனுப்புவது தான் முதல் வேலை"..! என்று ஸ்டாலின் சற்று காட்டமாக பேசியிருந்தார்.. எப்போதுமே பொறுமையுடன் பேசும் ஸ்டாலினா இப்படி கொந்தளித்து பேசுவது என்று ஆச்சரியம் அப்போது எழுந்தது.

"கட்டெறும்பு பிஜேபி"

அதே மாதிரி திமுக ஆட்சிக்கு வந்ததும் ராஜேந்திர பாலாஜியை முதலில் கைது செய்தது திமுக அரசு... அன்று ராஜேந்திர பாலாஜி, விதைத்த விஷம பேச்சுக்கெல்லாம் இப்போது அறுவடை செய்து வருகிறார்.. இதோ அவர்மீது ஏகப்பட்ட புகார்கள் பறந்து கொண்டிருக்கிறது.. இதற்கு காரணம் ஒரு பாஜக ஆதரவாளர் என்பதுதான் அதைவிட ஹைலைட்டான விஷயம்.. மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஆகியோரை பற்றி இழிவாக சித்தரிக்கப்பட்ட போட்டோக்கள், ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோவுடன் இணைத்து "கட்டெறும்பு பிஜேபி" என்ற டிவிட்டர் கணக்கு பரப்பி வந்துள்ளது.

 கட்டெறும்பு பாஜக

கட்டெறும்பு பாஜக

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது கருணாநிதி குறித்தும், ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்ததுடன், இருவரின் பிறப்பு வளர்ப்பு குறித்து கடுமையாக பேசியிருந்தார். இந்த பதிவை கண்டு கொதித்து எழுந்து திமுகவினர் போலீசில் புகார் அளித்து வருகின்றனர்... சம்பந்தப்பட்ட கட்டெறும்பு பிஜேபி என்கிற டுவிட்டர் கணக்கு முடக்க வேண்டும் என்று அளித்த புகாரில் சென்னை அசோக் நகர் சைபர் கிரைம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.. இந்நிலையில், இன்னொரு புகாரும் போலீசுக்கு போயுள்ளது..

 கட்டெறும்பு

கட்டெறும்பு

மணப்பாறையில் அரசு வழக்கறிஞராக இருந்து வருபவர் முரளி கிருஷ்ணன். இவர் கடந்த 20ம் தேதி இரவு 7 மணிக்கு, தன்னுடைய செல்போனில் ட்விட்டர் பக்கத்தை பார்த்து கொண்டிருந்தபோது, "கட்டெறும்பு பிஜேபி" என்ற ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதியையும், ஸ்டாலினையும் குறித்து ராஜேந்திர பாலாஜி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிய விடியோவை பார்த்துள்ளார்.. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், முன்னாள் அமைச்சர் மீதும், அதை பதிவிட்ட ட்விட்டர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மணப்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் ராமநாதனிடம் புகார் தந்துள்ளார். கருணாநிதி , முதல்வர் ஸ்டாலின் பற்றி ராஜேந்திர பாலாஜி அவதூறாக பேசிய வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டதாக அந்த புகாரில் அரசு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்..!

கடிச்சிடுச்சே

கடிச்சிடுச்சே

3 நாளைக்கு முன்புகூட, திமுகவில் சென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழிற்நுட்பப் பிரிவு அணியின் துணை தலைவராக பொறுப்பு வகித்து வரும் தினேஷ் என்பவர், சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை தந்திருந்தார்.. சம்பந்தப்பட்ட யூடியூப்பை முடக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்ததுடன், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டதாகவும் அறிவித்திருந்தார்.. எனினும், கட்சியின் விதிமுறைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றும் விதமாக சட்ட ரீதியாக இதை கொண்டு செல்ல எண்ணி தான் புகார் அளித்துள்ளதாகவும், இப்புகாரை அடிப்படையாகக் கொண்டு தமிழக முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் குறித்து இழிவாக சித்தரித்து பதிவிட்டுள்ள கட்டெறும்பு பிஜேபி என்ற ட்விட்டர் கணக்கை முடக்கி, அதை பயன்படுத்தி வந்த நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியிருந்தார்.. நாளுக்கு நாள் திமுக தரப்பில் கொந்தளிப்புகள் வெடித்து வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்களும் கூடி வருகின்றன..!!

English summary
katterumbu-bjp: DMK Cadres Compalint against AIADMK EX Minister Rajendra balaji in Manapparai Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X