காவேரி மருத்துவமனை என்னுடையதா? அட ஏங்க நீங்க வேற! அதில் 7 பேர் கூட்டு! கே.என்.நேரு பளிச்!
திருச்சி: காவேரி மருத்துவமனையை 7 பேர் சேர்ந்து கூட்டாக நடத்தி வரும் நிலையில், அந்த மருத்துவமனையை என்னுடையது என அண்ணாமலை கூறினால் அதற்கு என்ன அர்த்தம் என அமைச்சர் கே.என்.நேரு வினவியுள்ளார்.
காவேரி மருத்துவமனையை என்னுடையது எனக் கூறும் அண்ணாமலையிடம் சொல்லி, அந்த மருத்துவமனையை மட்டும் வாங்கிக் கொடுங்க என அமைச்சர் நேரு கலாய்த்தார்.
தமிழகத்தின் முக்கிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்று காவேரி மருத்துவமனை. கடந்த 2018ஆம் ஆண்டுக்கு முன்பாக சென்னை மக்கள் மத்தியில் மட்டும் பரிச்சயம் பெற்றிருந்த இந்த மருத்துவமனை கருணநிதிக்கு சிகிச்சை அளித்த காரணத்தால் தமிழகம் முழுவதும் பரிச்சயம் ஆகத் தொடங்கியது.

கருணாநிதியின் இறுதி நாட்கள் காவேரி மருத்துவமனையில் கழிந்ததால் நொடிக்கு நொடி ஊடகங்களில் பேசு பொருளாகவும், தலைப்புச் செய்தியாகவும் காவேரி மருத்துவமனை இடம்பெற்றது.
இதனிடையே திருச்சி, காரைக்குடி, என பல இடங்களில் தற்போது இம்மருத்துவமனை கிளை பரப்பியுள்ளது. இதனிடையே இந்த மருத்துவமனை அமைச்சர் நேருவுக்கு சொந்தமானது என யூகங்களின் அடிப்படையில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தன.
அதற்கேற்றார் போல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் காவேரி மருத்துவமனை அமைச்சர் நேருவுக்கு சொந்தமானது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் அட ஏங்க நீங்க வேற, காவேரி மருத்துவமனையை 7 பேர் கூட்டாக நடத்தி வருகிறார்கள் என்றும் எனது மருத்துவமனை என்றால் அண்ணாமலையிடம் சொல்லி அதை மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க எனவும் நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.

தன்னுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தேர்தலில் போட்டியிடும் போதே கொடுத்திருப்பதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு போடுவார்கள் எனவும் நேரு கூறினார்.
திமுக பைல்ஸ் என்ற பெயரில் முக்கிய அமைச்சர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டிருக்கும் நிலையில் அமைச்சர் நேரு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications