லலிதா ஜுவல்லரி கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் முருகனை நெருங்கியது போலீஸ்.. முக்கிய உறவினர் அதிரடி கைது!
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட கொள்ளையன் முருகனின் உறவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட கொள்ளையன் முருகனின் உறவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது.
சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், பொம்மை முகமூடிகளை அணிந்து கொள்ளை அடித்தனர். மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் அந்த பகுதியில் கொள்ளையடிக்கப்பட்டது.

என்ன கைது
முதலில் இந்த கொள்ளையை வட இந்தியர்கள் செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதன்பின் சிசிடிவி காட்சிகளில் தெரிந்த கொள்ளையர்களின் கால் நிறத்தை வைத்து, கொள்ளையடித்தது தமிழர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி, தஞ்சை, திருவாரூரில் தீவிர வாகன சோதனை நடந்தது.

இரண்டு பேர் சிக்கினார்கள்
இந்த சோதனையில் திருவாரூரில் இரண்டு பேர் சிக்கினார்கள். விலை உயர்ந்த பெட்டிகளை கொண்டு காரில் சென்ற மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். அவருடன் வந்த சுரேஷ் என்ற நபர் மாயமானார். இதையடுத்து தற்போது போலீசார் சுரேஷின் தாயை கைது செய்தனர்.

என்ன விசாரணை
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள்தான் கொள்ளையடித்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு மூளையாக முருகன் என்ற நபர் செயல்பட்டதும், அவர்களுக்கு பின் பெரிய குழு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முருகனை தற்போது போலீசார் தேடி வருகிறார்கள்.

தீவிரம்
இவரை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறி வருகிறது. தனிப்படை அமைத்தும் போலீசால் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முருகனின் அண்ணன் மகன் முரளியை போலீசார் கைது செய்தனர்.

எப்படி தற்போது
தற்போது இன்று காலை முருகனின் உறவினர் பிரதாப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் காலையில் இருந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் செய்யப்படும் விசாரணை மூலம் முருகனை விரைவில் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications