கூர்கா கையில் கூட சாவி இருக்கு! ஓனர் ஆகிவிட முடியுமா? வெடித்த ’மாஜி’! உற்று பார்த்த ஓபிஎஸ் ‘டீம்’!
திருச்சி: தேர்தல் மூலம் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரால் மட்டுமே அதிமுக-வை வழிநடத்த முடியும் என முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலக சாவி இருந்தால், கட்சி எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமாகி விடுமா? என்றும் அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமாக வெல்லமண்டி நடராஜன், கு.பா. கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் திருச்சி அண்ணா நகரில் உள்ள வெல்லமண்டி நடராஜன் அலுலுவத்திற்கு சென்றனர். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சத்துணவு திட்டம் - விமர்சனம்
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன், சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர், அறிவித்தபோது, அந்த திட்டத்தை நீக்க முடியாமல், உதயநிதி ஸ்டாலினின் பாட்டனார், முட்டையுடன் சத்துணவு கொடுத்தார். மீண்டும், அதனை நினைவுப்படுத்தும் அவல நிலைக்கு வந்துள்ளோம். பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்துள்ளனர். கையேந்த வைத்துள்ளனர் எனக் கூறியதோடு, இந்தத் திட்டத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்காமல் இந்த திட்டம் எப்படி செயல்படுத்த முடியும் என அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்தார்கள்.

சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்.
இதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., பிச்சை எடுத்தாவது இந்தத் திட்டத்தை நடத்துவேன் என சூளுரைத்தார். மேலும், இந்தத் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி, உலகம் முழுவதும் அனைவரும் பாராட்டும்படி இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததை யாரும் மறக்க வேண்டாம். சத்துணவு திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், இவர்கள் ஆட்சி காலத்தில் சத்துணவுடன் சேர்த்து முட்டையை வழங்கினார்கள்.

ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், ஓ.பன்னீர் செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர் என்று தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. பொதுச் செயலாளர் தேர்தலுக்கான களப்பணிகளில் நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகிறோம். மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவுரை கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கருதுகிறேன்.

அதிமுக அலுவலக சாவி
அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது குறித்த கேள்விக்க பதிலளித்த அவர், ஜெயில் சாவி கூர்காவிடம் இருக்கு என்பதால், அவருக்கு சொந்தமாகி விடுமா? சாவி மட்டுதான் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. அதிமுக அலுவலகம் அனைவருக்கும் சொந்தம் என்றார். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் - சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது ஒரு இயல்பான சந்திப்பு என கூறினார்.

அதிமுக அலுவலகம்
அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு வீட்டை வெள்ளை அடித்துதான் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பார்கள். அந்தப் பணிகளைதான் தற்போது அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் கட்சி அலுவலகம் எங்கள் கைக்கு வந்துவிடும். அதன் பிறகு அனைத்தும் சரி செய்யப்படும்.

அதிமுக பொதுச் செயலாளர்
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக சட்டவிதிப்படி இடைக்காலம் என்பதே கிடையாது. ஆகையால், இடைக்கால பொதுச் செயலாளர் என்பதும் செல்லாது. அப்படி ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று இருந்தால், சசிகலா இப்போது இடைக்கால பொதுச் செயலாளர் தானே.

பொதுச் செயலாளர் தேர்தல்
எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அந்த பதவியோடு நடத்துவோம். அதிமுக ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. கட்சியை எப்படி நடத்தவேண்டும் என்று எம்.ஜி.ஆர். சட்ட விதிகளை உருவாக்கி வழங்கியுள்ளர். அதன்படியே நாங்கள் பயணிப்போம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க யாரும் அப்போது இல்லை. அதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட வல்லமை படைத்த தலைவர்கள் இப்போது யாரும் இல்லை.

தொண்டர்களால் தேர்வு
ஆகையார் தேர்தல் மூலமாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும். அதிமுக சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அவர்கள் நினைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியும் வருவார் என எதிர்பார்க்கிறோம். எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். எடப்பாடி பழனிசாமி அவருடைய வழியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் செல்லட்டும். பின்னர் மீண்டும் திரும்பி வருவார் என முன்னாள் அமைச்சர் கு.பா. கிருஷ்ணன் தெரிவித்தார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications