வீட்டில் தனியாக இருந்த கோகிலா, லலிதா.. திடீரென மயங்கி விழுந்து மரணம்.. பகீர் காரணம்.. திருச்சியில்!
2 மகள்களையும் விஷம் வைத்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்
திருச்சி: வயசுக்கு வந்த மகள்கள் என்று பார்க்கவில்லை.. 2 பேரையுமே விஷம் கொடுத்து கொன்ற பெற்ற தாய் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளார். திருச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் கனகராஜ்... இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார். லாக்டவுனால் தற்போது வேலை இல்லை.
இவரது மனைவி சாந்த மீனா. இவர்களுக்கு லோகநாதன் என்ற 15 வயது மகனும், கோகிலா 13, லலிதா 11 என இரு மகள்களும் உள்ளனர். இவர்களது கூட்டுக்குடும்பம்.. கணவரின் சகோதரர் குடும்பம் என அனைவரும் ஒரே வீட்டில் உள்ளனர்.

மயக்கம்
இந்நிலையில், சம்பவத்தன்று, சாந்தமீனா வெளியில் சென்றிருந்தார்.. ஊரடங்கு என்பதால் இரண்டு மகள்களும் வீட்டில் இருந்தனர்.. அப்போது திடீரென 2 பேருமே மயங்கி விழுந்துள்ளனர்.. இந்த தகவல் அறிந்து பதறியடித்து கொண்டு வந்த உறவினர்கள் கோகிலா, லலிதாவை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

முதலுதவி
அங்கு முதலுதவி தரப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.. ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி கோகிலாவும், லலிதாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் போலீசாருக்கு அளிக்கப்பட்டதை அடுத்து, தாய் சாந்தமீனாவே நேரிடையாக சரணடைந்தார்.

பெண்கள்
அப்போது அவர் வாக்குமூலத்தில் சொன்னதாவது: "நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தோம்.. என் கணவரின் சகோதரரும் எங்களுடன்தான் இருக்கிறார்.. அவர் பாக்கெட்டில் வைக்கும் பணம் அடிக்கடி காணாமல் போனது.. அந்த பணத்தை என் பொண்ணுங்கதான் எடுத்தனர்... அது வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அசிங்கம், அவமானம் வந்துவிடும் என்று பயந்து விட்டேன்.. அதனால்தான் குழந்தைகளுக்கு கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து தந்தேன்" என்றார்.

வாக்குமூலம்
இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து சாந்தமீனாவை போலீசார் கைது செய்தனர்.. அவரிடம் தொடர் விசாரணை நடக்கிறது. பணத்தை மகள்கள் எடுத்தார்களா? ஏன் எடுத்தார்கள்? இது தொடர்பாக வீட்டில் ஏதேனும் பிரச்சனை எழுந்ததா? மகள்களை பெற்ற தாய் கண்டிக்கவில்லையா? என்பன போன்ற பல சந்தேகங்கள் இதில் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். எனினும், பெற்ற மகள்களை கூல்டிரிங்ஸில் விஷம் வைத்து கொலை செய்தது திருச்சியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications