மக்களவை தேர்தல்: துரை வைகோ இப்படி சொல்கிறாரே.. திமுக தலைமை ஒப்புக் கொள்ளுமா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மக்களவைத் தோ்தலில் தனி சின்னத்தில் மதிமுக போட்டியிடும் திருச்சியில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய மண்டல மதிமுக சாா்பில், தோ்தல் நிதி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா தலைமை வகித்தாா். இதில், திருச்சி மாநகா் மாவட்டம், திருச்சி தெற்கு, வடக்கு, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டம் மற்றும் முக்கியப் பிரமுகா்கள், நிா்வாகிகள் தனித்தனியே அளித்த தொகை என மொத்தம் ரூ.1.09 கோடி தோ்தல் நிதியாக துரை வைகோவிடம் வழங்கப்பட்டது.

MDMK Durai Vaiko says that this time his party will contest in separate symbol

இக் கூட்டத்தில், மதிமுக மாநிலப் பொருளாளா் மு. செந்திலதிபன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா. சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ்மாணிக்கம், எஸ். கலியமூா்த்தி, செ. ஜெயசீலன், க. ராமநாதன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியது: தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் அரசின் உரையை ஆளுநா் படிக்காமல் புறக்கணித்தது இதுவே முதன்முறை. கடந்த முறை அரசின் உரையில் இடம்பெற்றிருந்த பலவற்றை தவிா்த்துவிட்டு படித்தாா். அரசுக்கு இடையூறு அளிக்கும் வகையிலேயே ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

பாரம்பரிய மரபே முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், பிறகு தேசிய கீதமும் படிப்பதுதான். இன்னும் சொல்ல போனால் ஆர்.எஸ்.எஸ் கொடியை ஏற்றி அதன் ஸ்லோகத்தை சொல்ல வேண்டும் என ஆளுநர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில்தான் போட்டியிடுவோம். தொகுதிப் பங்கீடு பேச்சு திருப்திகரமாக இருந்தது.

MDMK Durai Vaiko says that this time his party will contest in separate symbol

கடந்த தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இந்த முறை தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது தான் கட்சியினா் விருப்பமாக இருக்கிறது. திமுகவிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். தனி சின்னத்தில் போட்டியிட அனுமதி தருவாா்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு தொடந்து இடைஞ்சல் கொடுத்து வருகிறார். ஆர்.என்.ரவி ஆளுநராக இருக்க தகுதி இல்லை அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு செயலாளராக இருக்க தான் தகுதி படைத்தவர். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து இணை அரசாங்கத்தை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது.

கடந்த முறை தலைவர்கள் காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் பெயரை தவிர்த்துவிட்டு உரையை வாசித்தார். அதற்கான விளக்கத்தை கவர்னர் அளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் செய்து வருகிறார். அவருக்கு ஆளுநராக இருப்பதற்கான எந்த தகுதியும் இல்லை.

பாஜக பிரதிநிதி போல் செயல்படுகிறார். தமிழகம் மட்டுமல்லாமல் பாஜக ஆளாத கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக அரசின் தலையீடு அதிகமாகவே உள்ளது. நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம் என்றும் தமிழகத்தில் 20 சதவீத வாக்குகளை வாங்குவோம் என்றும் பாஜக சொல்வதை பார்த்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்வார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

18 கோடி பேருக்கு வேலைவாய்பபு, எரி பொருள் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வுக்கு எரிபொருள் விலை உயர்வும் ஒரு காரணம். பல விஷயங்களில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறதால் மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+