சமயபுரம் மாரியம்மன் கோயிலில் யார் பாருங்க.. அள்ள அள்ள தங்கம்..நாலாபக்கமும் கேமரா.. திகுதிகு திருச்சி
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் 300 கிலோ 675 கிராம் தங்கத்தை காணிக்கையாக அளித்திருக்கிறார்கள்.. இதையடுத்து, தங்கத்தைத் தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணி ஆரம்பமாகியிருக்கிறது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது.. எனவேதான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளையும், உண்டியலில் செலுத்தி வணங்கி வருகிறார்கள்.

தன்னார்வலர்கள்: இவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் பல்வேறு தன்னார்வலர்கள் கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், ஒரு குறிப்பிட்ட நாள் இடைவெளியில் எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் தங்க ஆபரணங்கள் குறித்து முக்கிய உத்தரவினை பிறப்பித்திருந்தார்.
தங்கம் உருக்காலை: அதன்படி, தமிழகத்திலுள்ள கோயில்களில் கடந்த 10 வருடங்களில் காணிக்கையாக கிடைக்க பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்கம் உருக்காலையில் உருக்கி, அதனை சுத்த தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, இந்த பணிகளுக்காகவே அறநிலையத்துறை சார்பில், தமிழகம் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.. இந்த குழுவினர் கோயில்களுக்கு சென்று காணிக்கை தங்கங்களில் படிந்துள்ள அழுக்குகள், அரக்கு, கற்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு, தூய்மைப்படுத்தி தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பணிகள்: அந்தவகையில், இப்போது சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற தங்கத்தை தரம்பிரித்து எடை போடும் பணியை நேற்று துவங்கியிருக்கிறார்கள்.. கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 300 கிலோ 675 கிராம் தங்கத்தை தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணியில், சுப்ரீம்கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ, ஹைகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் இந்த பணிகள் துவங்கியிருக்கிறது.
இந்த பணியில் 3 மண்டல செயல் அலுவலர்கள், சமயபுரம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் முன்னிலையில் 25க்கும் மேற்பட்ட பொற்கொல்லர்களும் ஈடுபட்டுள்ளனர்.. நேற்று துவங்கப்பட்ட இந்த பணியானது, தொடர்ந்து மேலும் 8 நாட்களுக்கு நடைபெற போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு: எனவே, இந்த பணிகள் நடைபெறும் இடம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.. மேலும், பாதுகாப்பு பணியில் போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்றநீதிபதி துரைசாமி ராஜூ செய்தியாளர்களிடம் சொன்னபோது, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம் எல்லாமே, ஒரே மாதிரியான தரத்துடன் இருக்காது. அதனால்தான், அவகைளை தரம் பிரிக்கும் பணியை தொடங்கியிருக்கிறோம். இந்த பணிகள் முடிந்ததுமே, பாரத ஸ்டேட் வங்கிமூலமாக மும்பையில் உள்ள அரசின் உருக்காலைக்கு கொண்டுசெல்லப்படும்.. அங்கு 24 காரட் சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி, ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்படும்" என்றார்.
எஸ்பிஐ வங்கி: ஆக, இன்னும் 8 நாளில், தங்க நகைகள் சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்து, எஸ்பிஐ மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, சுத்தமான தங்கமாக பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என தெரிகிறது.. இதனை தொடா்ந்து, சுத்த தங்கத்திற்கான மதிப்பின் அடிப்படையில் தங்கப் பத்திரம் பெறப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி கோயில் வருவாயில் சோ்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
காணிக்கை : கடந்த மாதம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் செலுத்திய் காணிக்கைகள் எண்ணப்பட்டன.. வெறும் 12 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் , 93 லட்சத்து, 57 ஆயிரத்து, 414 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 990 கிராம் தங்கமும், 3 கிலோ 475 கிராம் வெள்ளியும், 217 அயல்நாட்டு நோட்டுகளும், 1011 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றது.. வெறும் 12 நாட்களில் மட்டும் 93 லட்சம் வரை பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளை செலுத்தியிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications