எம்ஜிஆரின் திருச்சி உறையூர் பங்களா.. 25 கோடி மதிப்பு.. கலெக்டருக்கு சர்வேயர் போட்ட முக்கியமான மனு
திருச்சி :திருச்சி உறையூர் திருத்தாந்தோணி ரோடு பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் காலியிடம் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இருக்கிறது. இன்றைய சந்தை மதிப்பில் 25 கோடி ரூபாய் ஆகும். இந்த சொத்துக்களை வறுமையில் வாடும் எம்ஜிஆரின் வாரிசுகளின் பெயர்களுக்கு மீண்டும் மாற்ற உத்தரவிட வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டரிடம் ஓய்வு பெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர் மனு அளித்துள்ளார். அவர் தனது மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் பெயருக்கும், தனிநபர் பெயர்களுக்கும் சொத்து எப்படி மாற்றப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் 1977 முதல் 1887 வரை 11 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார். மூன்று முறை தொடர்ந்து தேர்தலில் வென்று முதல்வராக இருந்தார். மக்களால் எம்.ஜி.ஆர் என்றும் புரட்சி தலைவர் என்றும் போற்றப்பட்ட இவர், திரைத்துறையிலும், அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர் ஆவார்.

திருச்சி தலைநகரம்
இவருக்கு திருச்சி மீது அதிக பாசம் இருக்கும். எப்படியாவது சென்னைக்கு பதில் திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகராக்க ஆசைப்பட்டார். ஆனால் நடைமுறை சிக்கல்கள் காரணமாக அப்போது அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.. அதேநேரம் திருச்சியில் தங்குவதற்காக உறையூர் பகுதியில் பங்களா ஒன்றை அந்த காலத்தில் வாங்கினார். அந்த பங்களா இப்போதும் பிரம்மாண்டமாக இருக்கிறது. இது அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் பதியப்பட்டுள்ளது.
உறையூரில் எம்ஜிஆர் பங்களா
இது குறித்து திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "திருச்சி உறையூர் திருத்தாந்தோணி ரோடு பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் காலியிடம் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதனுடைய இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி மகள்கள் மற்றும் மகன்கள் வாரிசுகளாக பதிவு செய்து, அவர்களது பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் பெயர்
பின்னர் வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று அந்த கட்டிடம் பதியப்பட்டது. அதன் பின்னர் அந்தப்பெயரும் நீக்கம் செய்யப்பட்டு ஒரு தனி நபரின் பெயரில் கணினி நிலப்பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் வாரிசுகளின் பெயர்களை ரத்து செய்ய வேண்டும் என்றால் ஆர்.டி.ஓ.வுக்கு மேல்முறையீடு செய்து அவருடைய ஆணை பெற்று அதன்பேரில் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆர்டிஓ விசாரணை
ஆனால், இந்த நடைமுறை அப்போது முறையாக பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து ஆர்.டி.ஓ.வுக்கு மேல்முறையீடு செய்திருந்தேன். ஆர்.டி.ஓ. 1.10.2021 மற்றும் 18.10.2021 ஆகிய தேதிகளில் என்னை அழைத்து விசாரணையும் நடத்தினார். தற்போது நிலப்பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் வாரிசுகளின் பெயர்களை பதியாமல், அந்த தனி நபரின் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் அ.தி.மு.க என்று கணினியில் பதியப்பட்டிருக்கிறது.
எம்ஜிஆரின் வாரிசுகள்
எம்.ஜி.ஆர். தனது பெயரில் கிரயம் பெற்ற பத்திர நகலினை இத்துடன் இணைத்துள்ளேன். எம்.ஜி.ஆர். தனது சொத்தினை அ.தி.மு.க.விற்கு பத்திரம் மூலம் வழங்கியிருந்தாரா? அல்லது உயில் ஏதேனும் எழுதி வைத்தாரா? என்பதை அரசு விளக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் (கலெக்டர்) ஆர்.டி.ஓ.வின் அலுவலக கோப்பை வாங்கி, அவர் செய்த விசாரணை மற்றும் உத்தரவினை பரிசீலனை செய்து வறுமையில் வாடும் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் பெயர்களை நிலப்பதிவேட்டில் மீண்டும் பதிய உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த மனுவில் ஓய்வு பெற்ற சர்வேயர் சார்லஸ் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications