காலம் பொன் போன்றது! ஷார்ப்பாக குறித்த நேரத்தில் ஆஜராகும் அமைச்சர் அன்பில் மகேஷ்! கட்சியினர் வியப்பு!
திருச்சி: கட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி குறித்த நேரத்தில் அங்கு ஆஜராகி அதிகாரிகளையும், கட்சியினரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
பொதுவாக அரசியல்வாதிகளை பொறுத்தவரை 6 மணிக்கு வருகை தருவார் எனக் கூறப்பட்டால் 8 மணிக்கு தான் வருகை தருவார்கள். அதுவரை அவருக்காக ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கும் சூழல் ஏற்படும்.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை பொறுத்தவரை 9 மணி என்றால் 8.55-க்கே நிகழ்விடத்தில் ஆஜராகி அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிடுகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் அமைச்சர்கள் அவரவர் மாவட்டங்களில் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றிருக்கிறார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
காலை 9 மணிக்கு கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எப்படியும் அமைச்சர் வருவதற்கு ஒன்பதரை மணி முதல் 10 மணி ஆகிவிடும் என கட்சியினர் பலரும் தாமதமாக நிகழ்விடத்துக்கு சென்றிருக்கின்றனர். ஆனால் அமைச்சர் அன்பில் மகேஷோ, 9 மணி கூட்டத்துக்கு 8.55 மணிக்கே மிக ஷார்ப்பாக அங்கு ஆஜராகி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு திமுகவுக்கு எவ்வாறு மக்களிடம் வாக்குக்கேட்க வேண்டும் என்ற டிப்ஸ்களையும் நிர்வாகிகளுக்கு கொடுத்துவிட்டு அடுத்த நிகழ்விடமான துவரங்குறிச்சி புறப்பட்டு சென்றுவிட்டார்.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக இருப்பதாலோ என்னவோ, அன்பில் மகேஷை பொறுத்தவரை நேரம் தவறாமையை முழுமையாக கடைபிடித்து வருகிறார். இதனால் குறித்த நேரத்தில் குறித்த பணிகள் முடிவதால் அவருக்கு மட்டுமல்ல அந்த நிகழ்வில் பங்கேற்கும் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் என பலருக்கும் நேரம் வீணாக கழியாமல் மிச்சமாகிறது. திருச்சி, தஞ்சை, என இரண்டு மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும் என்பதால் நாளொன்றுக்கு 150 கி.மீ.க்கு குறையாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்கு பரிசு
இதனிடையே திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற போது காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது என்ற வாசகம் தாங்கிய பெயர் பலகையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசாக கொடுத்தது கவனிக்கத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications