திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளை விடுங்க சாமி! பெரிய கும்பிடு போட்டுவிட்டு கிளம்பிய அமைச்சர் கே.என்.நேரு! திருச்சியில் ருசிகரம்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய முக்கிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்க விரும்பாத மூத்த அமைச்சர் கே.என்.நேரு, பெரிய கும்பிடு ஒன்று போட்டுவிட்டு அங்கிருந்து நடையை கட்டினார்.

செய்தியாளர்கள் எதையாவது கேட்டு தனது வாயை பிடுங்கப்பார்ப்பார்கள் என நகைச்சுவையாக கூறிக்கொண்டே எஸ்கேப் ஆனார்.

திருச்சி மற்றும் சேலம் என இரண்டு மாவட்டங்களுக்கு அமைச்சர்களாக இருப்பதாலும் முக்கிய இலாகாவை தன் வசம் வைத்திருப்பதாலும் எப்போதுமே கே.என்.நேருவுக்கு செய்தியாளர்களிடம் இருந்து கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது.

“ஸ்டாலின்தான் வாராரு.. சேலம் குலுங்கணும்.. எடப்பாடி அதிரணும்”- நேரு தலைமையில் ஸ்கெட்ச் போட்ட திமுக! “ஸ்டாலின்தான் வாராரு.. சேலம் குலுங்கணும்.. எடப்பாடி அதிரணும்”- நேரு தலைமையில் ஸ்கெட்ச் போட்ட திமுக!

மூத்த அமைச்சர்

மூத்த அமைச்சர்

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர்துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த அமைச்சர்கே.என்.நேரு. கட்சிக்காரர்களிடமும் சரி செய்தியாளர்களிடமும் சரி உரிமையாகபேசும் வழக்கத்தை கொண்ட இவர் இறுக்கமாக இருக்கும் இடத்தை கூட தனதுநகைச்சுவை ததும்பிய பேச்சால் கலகலப்பாக்கிவிடுவார். நேரு பேசுவதை அவரைதவிர்த்து வேறு யார் பேசினாலும் அது பெரிய வம்பாகும்.தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர்
துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த அமைச்சர்கே.என்.நேரு. கட்சிக்காரர்களிடமும் சரி செய்தியாளர்களிடமும் சரி உரிமையாகபேசும் வழக்கத்தை கொண்ட இவர் இறுக்கமாக இருக்கும் இடத்தை கூட தனது
நகைச்சுவை ததும்பிய பேச்சால் கலகலப்பாக்கிவிடுவார். நேரு பேசுவதை அவரை
தவிர்த்து வேறு யார் பேசினாலும் அது பெரிய வம்பாகும்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

ஆனால் இவர் மட்டும் போகிற போக்கில் எதையுமே எளிதாக பேசிவிட்டுச் செல்வார்.இந்நிலையில் திருச்சியில் இன்று தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்க வந்தஅமைச்சர் நேருவிடம், காவிரியில் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்தாண்டுமேட்டூர் அணையிலிருந்து முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்படுமா என
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வியை பொறுத்தவரை மிகமுக்கியமான ஒன்றாகும். இது முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய விவகாரமாகும்.

பெரிய கும்பிடு

பெரிய கும்பிடு

இதனால் சுதாரித்துக் கொண்ட அமைச்சர் நேரு, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க விரும்பாமல் அங்கிருந்து புறப்பட்டார். மீண்டும் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேட்க முற்பட்ட போது, ஆளை விடுங்க சாமி என்கிற வகையில் பெரியகும்பிடு ஒன்று போட்டுவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடையை கட்டினார் அமைச்சர் நேரு. ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்னீர் திறக்கப்படுவது வழக்கம்.

பொறுப்பு அமைச்சர்

பொறுப்பு அமைச்சர்

அமைச்சர் துரைமுருகன் வசம் நீர்வளத்துறை உள்ள நிலையில், அவர் இது தொடர்பாக பேசுவதற்கு முன்னர் தாம் அதுபற்றி பேசினால் நன்றாக இருக்காது என்பதாலேயே
இந்தக் கேள்வியை அமைச்சர் நேரு தவிர்த்ததாக காரணம் கூறப்படுகிறது. இதனிடையே மேட்டூர் அணை உள்ள சேலம் மாவட்டத்திற்கும் நேரு தான் இப்போது பொறுப்புஅமைச்சர் என்பது கவனிக்கத்தக்கது.

English summary
Minister Kn Nehru did not want to answer the question about the Mettur dam open
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X