எப்படியாச்சும் என் மகனை காப்பாத்துங்க.. கதறி அழுத சுஜித் தாயார்.. கலங்கி நின்ற ஜோதிமணி

எம்பி ஜோதிமணியிடம் சுஜித்தின் தாய் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விடிய விடிய குமுறலோடு காத்திருந்த சுஜித்தின் தாய்...!

    மணப்பாறை: "என் குழந்தையை எப்படியாவது காப்பாத்தி தந்திடுங்க" என்று குழந்தை சுஜித்தின் தாயார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம் கண்ணீர் மல்க கேட்டு கொண்டுள்ளார். அதற்கு "சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான்" என்று எம்பி நம்பிக்கை வார்த்தை தெரிவித்துள்ளார்.

    நேற்று மாலை 5.40- மணிக்கு ஆழ்துறை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்துவிட்டான். 70 அடி ஆழத்தில் குழந்தை உள்ளதால், அவனை பத்திரமாக மீட்கும் பணி 21 மணி நேரத்தை கடந்து நடந்து வருகிறது.

    mp jothimani meets sujiths mother

    இதற்காக தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு கூட்டு முயற்சியில் இறங்கி வருகிறது. குழந்தை இடுக்கி போன்ற குழந்தையை பத்திரமாக மீட்க கோரி உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கிணற்றில் விழுந்து 21 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதால், உணவு, தண்ணீரின்றி குழந்தை தவித்து வருகிறது.

    ஆனால் தொடர்ந்து ஆக்சிஜன் சுஜித்துக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் இடுக்கி போன்ற பொருட்களை வைத்து குழந்தையை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

    mp jothimani meets sujiths mother

    இதனிடையே குழந்தையின் தாயை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். "என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தந்துவிடுங்கள்" என்று ஜோதிமணியிடம் தாயார் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். அதற்கு ஜோதிமணி, சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான் என்று அவருக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, "கனத்த இதயத்துடன் நின்று கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும். ஆழ்துளை கிணறு தொடர்பாக அரசு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+