மொகரம்.. அரசு விடுமுறை.. சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஸ்பெஷல் பஸ் ரெடி.. மிஸ் பண்ணாதீங்க
திருச்சி: தமிழகத்தில் நாளை மொகரம் கடைபிடிக்கப்படும் நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக திருச்சி, கோவையில் இருந்து பிற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
படிக்கவும் வேலைக்காகவும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து ஏராளமானோர் தங்கியுள்ளனர். இரண்டு நாட்கள் விடுமுறை என்றாலும் சொந்த ஊர் செல்லவே விரும்புகின்றனர். ரயில், சொசுகு பேருந்துகளில் செல்ல இடம் கிடைக்காதவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது அரசு பேருந்துகள்தான்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்தில் செல்ல வார இறுதி நாட்களில் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 300 பேருந்துகளும் என மொத்தம் 600 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாளைய தினம் ஜூலை 29ஆம் தேதி மொகரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மொகரம் என்பது இஸ்லாமியர்களின் காலண்டரில் முதல் மாதம். புதிய பிறை தென்படுவதன் முதல் நாளையே புதிய மாதத்தின் தொடக்கமாக கருகின்றனர். அந்த வகையில் ஜூலை 19ஆம் தேதி இஸ்லாமியர்களின் மொகரம் மாதம் தொடங்கியது. நாளைய தினம் 10ஆம் நாள் ஆகும். மொகரம் பண்டிகை கடைபிடிக்கப்பட உள்ளது. ரம்ஜானுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமான தினமாக மொகரம் பார்க்கப்படுகிறது.
மொகரம் தினம் கடைபிடிக்கப்படுவதால் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை, கோவை, திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. கோவை மண்டல போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொகரம் மற்றும் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகப்படியாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சனி, ஞாயிறு மற்றும் மொகரம் பண்டிகையை ஒட்டி 4 நாட்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மேற்குறிப்பிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் வருகையை கவனித்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக போக்குவரத்து அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை களமிறக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் சிறப்பு பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்குமாறு பொதுமக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications