எனக்கே ஸ்கெட்ச்சா? தீர்த்துட்டேன்! ராமஜெயம் வழக்கில் விசாரிக்கப்பட்ட பிரபுவை கொன்ற ரவுடி வாக்குமூலம்
திருச்சி: தன்னை கொலை செய்ய திட்டமிட்டதால் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பிரபுவை தான் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் வள்ளுவன் நகரைச் சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன். பிரபு, திருச்சி அரசு மருத்துவமனை எதிரே அலுவலகம் வைத்து தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். கிரிமினல் பின்னணி கொண்ட பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி சிறை சென்ற பிரபாகரன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இரவு 7 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார். இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆபிசர்ஸ் காலனியில் உள்ள அவரது அலுவலகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் முகக் கவசம் அணிந்து கொண்டு பிரபாகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். பின்னர் கொலையாளிகள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பிரபுவிடம் கடந்த சனிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் மீண்டும் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமஜெயம் கொலை வழக்கில் பயன்படுத்தபட்டதாக சந்தேகப்படக்கூடிய கார் தொடர்பாக, பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வரும் பலரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர். அதுபோல பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் ஆம்புலன்ஸ் பிரபுவிடம் ஏதாவது துப்பு கிடைக்குமா என்ற கோணத்தில் விசாரணை செய்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் பிரபுவின் கொலை அதிர்ச்சியை கிளப்பியது.
பிரபு கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் அன்பு கைப்பற்றி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (38), பஷீர் (29), ரியாஸ் ராஜ் (24) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (28) மற்றும் அப்துல் கபூர் பஷீர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த கொலையில் தொடர்புடைய அப்பு என்கின்ற ஹரிஹரன் தப்பி தலைமறைவானார். அப்பு சில ஆண்டுகள் பிரபுவிடம் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் தனியாக ஆம்புலன்ஸ் தொழிலை செய்து வந்தார். இதனால் பிரபுவுக்கும், அப்புவுக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பு, பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையை வைத்து அவரது அலுவலகத்திலேயே கொலை செய்துள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி அப்பு, திருச்சி துவாக்குடி செக்போஸ்ட் அருகில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த அப்புவை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தன்னை கொல்ல முயன்றதால் பிரபுவை தான் படுகொலை செய்ததாக ரவுடி அப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் அப்புவை திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications