திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு கிலோ நகையை போலீஸே எடுத்துக்கிச்சு.. கோர்ட்டில் வைத்து பரபரப்பை ஏற்படுத்திய திருட்டு சுரேஷ்!

சுரேஷ் மீது கொள்ளையன் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளான்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருட்டு முருகன் தில் பேச்சு | gang leader murugans says about his talent to the press people

    திருச்சி: "கொள்ளையடித்த நகைகளில் ஒரு கிலோ நகைகளைதான் போலீஸ்காரங்களே எடுத்துக்கிட்டாங்க.. இப்ப நகை எங்கே, நகையை குடுன்னு கேட்கிறார்கள்" என்று சுரேஷ் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகன், சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோர் திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 28 கிலோ நகைகளில் 25 கிலோ நகைகளை 3 பேரிடமிருந்து போலீசார் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர்.

    மீதமுள்ள நகைகளை மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர்.. இதனால் இவர்களை காவலில் எடுத்தும் விசாரணை நடந்தது. முருகனிடம் 7 நாள் விசாரணை நடத்தியும் பெரிய அளவில் விஷயத்தை கறக்க முடியவில்லை.

    அடேங்கப்பா.. பெரிய பணக்கார வீட்டு பொண்ணா இருக்கும் போலயே.. அட வெங்காயம்! அடேங்கப்பா.. பெரிய பணக்கார வீட்டு பொண்ணா இருக்கும் போலயே.. அட வெங்காயம்!

    கொள்ளை

    கொள்ளை

    இந்தநிலையில் 2017ம் வருஷம் கேகே நகரில் ஒரு வீட்டில் கொள்ளை அடித்ததில் சுரேஷூக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். அதற்காக விசாரணை நடத்தவும் திருச்சி ஜேஎம்2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    கைவிலங்கு

    கைவிலங்கு

    அதற்காக சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். அப்போது, சுரேஷூக்கு கைவிலங்கு போடப்பட்டிருந்தது. இப்படி கைவிலங்கு போட்டு கூட்டிட்டு வந்ததற்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்து, செய்தியாளர்களிடம் பேசினான்.

    ஒரு கிலோ நகை

    ஒரு கிலோ நகை

    அப்போது, "நாங்கள் கொள்ளையடித்த நகைகளை விட கூடுதல் நகைகளை போலீசார் எங்களிடம் கேட்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் அப்போதே போலீசார் ஒரு கிலோ பிடுங்கி கொண்டனர். மீதமிருந்த கொள்ளையடித்த எல்லா நகைகளையும் நாங்களும் கொடுத்து விட்டோம். இருந்தாலும் வேற நகை எங்கே, குடுங்கன்னு கேட்கிறாங்க.. எங்களை போலீசார் துன்புறுத்துகிறார்கள்

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    திருவாரூர் போலீசில் ஒரு கிலோ நகைகள் வரை இருக்கிறது. ஆனால், நாங்கள் ஜாமீனில் வந்துவிட கூடாது என்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் இறங்குகிறார்கள்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை சுரேஷ் கூறியுள்ளான்.

    கொன்னுடுவாங்க

    கொன்னுடுவாங்க

    ஏற்கனவே போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது சம்பந்தமாக கோர்ட்டுக்கு சுரேஷை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, "ஐயையோ.. என்னை சுட்டு கொன்னுடுவாங்க" என்று நீதிபதியிடம் அலறினான். இதன்பிறகு, திரும்பவும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, "என் குடும்பத்தினரை போலீசார் தொந்தரவு செய்கிறார்கள்" என்று புகார் சொன்னான். இப்போது மீண்டும் போலீசார் மீதே சுரேஷ் பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளது அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    trichy lalitha jewelly theft case: accust murugan complaints against trichy police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X