ரோட்டில் போக மாட்டேன்! சென்டர் மீடியனில் டிவிஎஸ் 50ஐ ஓட்டிய இளைஞர்..திருச்சியில் பதறிய வாகன ஓட்டிகள்
திருச்சி: திருச்சியில் முத்தரையர் சதய விழாவின் போது சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் மேலே டிவிஎஸ் 50 பைக்கை இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஓட்டிச்செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
பெரும்பிடுகு முத்தரையர் 1,349ஆவது சதய திருவிழா கடந்த 23 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. சதய திருவிழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரசியல் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

போலீசாரிடம் வாக்குவாதம்: இந்த விழாவுக்காகத் திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டூ வீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இளைஞர்கள் பலரும் பைக்கில் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது பட்டாசுகளை வெடித்தும், கொடிகளை அசைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு சிலர் சாலையை மறித்து பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதை தடுக்க முயன்ற போலீசாரிடம் வாக்குவாதத்திலும் சில இளைஞர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
விசாரணை வேண்டும்: இந்த நிலையில், இன்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், டிவிஎஸ் 50 பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், திருச்சி மேம்பாலத்தில் உள்ள சென்டர் மீடியன் மேலே பைக்கை ஓட்டிச்செல்கிறார். சாகசம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் பைக்கை இளைஞர் ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் போக்குவரத்து போலீசாரை டேக் செய்து வருகிறார்கள்.
திருச்சியில் சிலை: கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சையை ஆட்சி செய்த அரசர் தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்.. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்று அறியப்படும் இவர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளை ஆண்ட தலைசிறந்த மன்னராவர்.
துணிச்சலான தமிழ் மன்னர்களில் ஒருவரான இவர் பல இடங்களைப் போரிட்டு வென்றுள்ளார்.. இவருக்கு 1996இல் தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திருச்சியில் சிலை ஒன்றை நிறுவினார்..
மாலை அணிவித்து மரியாதை: அதைத் தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 1,349ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது அதிகாரிகளும் உடன் இருந்தனர். அதைத் தொடர்ந்து முத்தரையர் சங்கத்தினர் மற்றும் அதிமுக, திமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பெரும்பிடுது முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications