வாயை விட்ட தம்பி..லிஸ்ட் போட்டு தூக்கிய வருண்குமார் ஐபிஎஸ்!காலேஜ் டாப்பராமே நீ..பெருந்தன்மைய பாருங்க
திருச்சி: திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எக்ஸ் தளத்தில் பல பேக் ஐடிக்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை வரவழைத்த எஸ்பி வருண்குமார் அவருக்கு, அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மேலும் இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி எஸ்பி நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியினை பழிவாங்குவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் கூறியிருந்தார்.

மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதால் எக்ஸ் தளத்திலிருந்து தானும் தனது மனைவியும் விலகுவதாக அறிவித்தார் வருண்குமார். மேலும் தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினர் என அனைவரையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சுமார் 50 பேரின் பட்டியலை பகிர்ந்த அவர் இது தொடர்பாக யாரையும் விடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் சமூக வலைதளத்தில் பேசும் இணையதள கூலிப்படையினர் மற்றும் அவர்களை தூண்டிவிடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் வருண்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே தன் மீது 130க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் அதனை 200 வழக்குகளாக மாற்ற வேண்டாம்.. எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் தான் அதை குப்பை தொட்டியில் தான் வீசுவேன் என தெரிவித்திருந்தார்.
மேலும் திமுகவின் ஐடி விங் நிர்வாகி போல வருண்குமார் செயல்படுவதாகவும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னுடன் நேருக்கு நேர் மோத வேண்டும் என சவால் விடுத்தார். அதற்கு பதில் அளித்துள்ள வருண்குமார் ஐபிஎஸ்,"திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ தனக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி படித்து, உழைத்துப் பெற்ற வேலை.. பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், தான் காக்கி சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். தான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமா? " என கேட்டிருந்தார். இப்படியாக இருவரிடையே மோதல் தொடர்ந்து வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர் குறித்து சமூகவலை தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் இந்த விவகாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
பொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்கும் அந்த மாணவர் கல்லூரியில் டாப்பர் என்பதால் அந்த மாணவரை பெருந்தன்மையுடன் விடுவித்திருக்கிறார் வருண் குமார் ஐபிஎஸ். மேலும் கல்லூரி மாணவரை அழைத்து உரிய கவுன்சிலிங் கொடுத்து அவரின் எதிர்காலம் கருதி விடுவிப்பதாகவும்.. இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி, தாய்க்கும் அறிவுரை கூறி அவருடன் அனுப்பி வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications