அண்ணாமலையை கண்டு பயப்படுகிறார்கள்.. மக்கள் இப்போது எங்கள் பக்கம்.. சி.டி.ரவி பாய்ச்சல்!
திருச்சி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து அனைத்து கட்சிகளும் பயப்படுவதாக அக்கட்சியின் தேசியச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளொரு அறிக்கை, பொழுது ஒரு போராட்டம், ஒவ்வொரு நாளும் செய்தியாளர் சந்திப்பு என பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஒவ்வொரு வாரமும் பொதுக் கூட்டம் என பாஜக தனது தொண்டர் பலத்தை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் தமிழ்நாடு வந்து செல்கின்றனர்.

திருச்சியில் சிடி ரவி
இந்த நிலையில் சிதம்பரத்தில் நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி.ரவி திருச்சி விமான நிலையம் வந்தார். இவருக்கு திருச்சி மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

5ஜி ஊழல்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சி.டி.ரவி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி வருகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றது. அதற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் அவர்கள் குடும்பத்தை முன்னேற்றுவது மட்டும் தான். திமுக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் முழு நேர வேலையே ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால் எங்கள் வேலை மக்களுக்கானது என்று தெரிவித்தார்.

அண்ணாமலை மீது பயம்
தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு சி.டி.ரவி பதிலளிக்கவில்லை. தொடர்ந்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் வேகமாக வளர்ந்து வருகிறோம். மக்கள் சேவை மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம்.
அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர். அவரின் நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சியினர் அச்சத்தில் உள்ளனர்.
Recommended Video

நேரு பற்றி பேச்சு
தொடர்ந்து முன்னாள் பிரதமர் நேரு ஒருமுறை சொன்னார் நாலு பேரை வைத்துக்கொண்டு பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது மொத்த நாடும் எங்களுக்கு பின் உள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications