நவராத்திரி 2024: உடல் முழுவதும் சாம்பல் பூசி! நள்ளிரவில் திருச்சியில் குவிந்த அகோரிகள்! ஒரே சப்தம்
திருச்சி: நவராத்திரி விழா நேற்று தொடங்கிய நிலையில் திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் உடல் முழுவதும் திருநீற்றை பூசிக் கொண்டு அகோரிகள் காட்சியளித்தனர்.
நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இந்த விழா 9 நாட்களுக்கு நடைபெறும். பிறகு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையுடன் இந்த விழா முடிவுக்கு வரும். நவராத்திரியையொட்டி பெரும்பாலானோர் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் கொலு வைத்திருப்பார்கள். அது போல் கோயில்களிலும் கொலு வைப்பதுண்டு.

கொலு வைப்பதற்கென சில விதிகள் உள்ளன. ஒற்றை படையில் படிகளை கொண்டு அமைக்கப்படும் கொலுவில் முதல் படியில் என்ன இருக்க வேண்டும். அடுத்த படியில் என்ன இருக்க வேண்டும். ராகவேந்திரா, ஷீரடி சாய்பாபா உள்ளிட்டோரின் சிலைகளை எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிந்து கொண்டு கொலு வைக்க வேண்டும்.
இந்த நிலையில் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இந்த கோயிலில் காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகளை செய்து கோயிலையும் நிர்வகித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் விசேஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழபாடுகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையடுத்து முதல் நாளான நேற்று இரவு அகோரி காளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தார். இதையடுத்து நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு சிறப்பு யாகங்களை செய்தனர்.
அப்போது மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்தார். பிறகு நவதானியங்கள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாக பூஜை செய்திருந்தார். அப்போது மற்ற அகோரிகள் சங்கை முழங்கினர். பிறகு ஜெய் கோர காளி, ஜெய் அஷ்ட கால பைரவர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜைகளையும் மகாதீபாராதனைகளும் செய்யப்பட்டது.
காசியிலும் நேபாளத்திலும் அகோரிகள் அதிக அளவில் காணப்படுகிறார்கள். இவர்கள் மண்டை ஓடுகளை வைத்தும் பூஜை செய்கிறார்கள் என சொல்லப்படுகிறது. மிருகங்களை பலி கொடுத்து, இறந்த மனிதர்களின் மாமிசத்தை உண்பார்கள். இவர்களின் வழிபாடுகளை பார்க்கும் போது சற்று அச்சமாகவே இருக்கும். இவர்களின் வசிப்பிடமே மயானம்தான்.
அகோரிகள் என்பவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். இவர்கள் மயானத்தில் உடல்களை எரித்த சாம்பலை தங்கள் உடலில் பூசிக் கொள்வார்கள். இவர்கள் தனிமையிலேயே வாழ்வார்கள். கும்பமேளாவின் போது ஒன்றாக கூடுகிறார்கள்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications