Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NDA Meeting Trichy LIVE: மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு தாமதப்படுத்துகிறது - மோடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் என்டிஏ கூட்டத்தில் பேசிய மோடி, "மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்பதற்காக திட்டங்களை வேண்டும் என்றே திமுக அரசு தாமதப்படுத்துகின்றது. மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தினை திமுக அரசு வேண்டும் என்றே தாமதப்படுத்தியது" என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் ஆளும் திமுகவை வீழ்த்த, அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். அந்த வகையில் இன்று மோடி திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். இது குறித்த தகவல்களை உடனுக்குடன் காண இங்கு இணைந்திருங்கள்.

NDA meeting in Trichy

Mar 11, 2026, 6:59 pm IST

ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது

திருச்சியில் உள்ள ஒரு தலைவர் வேலைவாங்கி தருவதாக பெரிய மோசடியில் சிக்கியிருக்கிறார். வேலை பணத்திற்காக விற்கப்படும் போது ஒரு ஏழை மாணவரின் வாழ்க்கை கனவாக போகின்றது. இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது.. எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேர்கிறதோ அதேபோல தமிழகத்தின் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது. அதன் குடும்ப சொத்தாக ஆகின்றது.
Mar 11, 2026, 6:59 pm IST

ஒரே குடும்பத்திடம் அதிகாரம்

2021 ஆம் ஆண்டில் திமுக அரசு அமைந்தது. திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்தோடு முடிகின்றது. அமைச்சர்கள் மாறலாம்.. சட்டசபை மாறலாம். ஆனால் அதிகாரம் என்னவோ ஒரே குடும்பத்திடம் மட்டுமே இருக்கும். விஞ்ஞான ரீதியான ஊழல். இந்த மாதிரிக்கு பெயர் போனது தான் திமுக. இந்த மாதிரி தான் ஒரே ஒரு குடும்பத்தின் ஏடிஎம்-ஆக மாற்றியிருக்கிறது. -
Mar 11, 2026, 6:53 pm IST

மதுரை மல்லி இனி பாரீசில் விற்கப்படும் - மோடி பேச்சு

திருச்சி: திருச்சியில் புதிய விமான முனையம் அமைத்தோம்.. இப்போது மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியுள்ளோம்.. மதுரையில் இருந்து உலக நாடுகளுக்கு இனி நேரடியாக போக முடியும்.. இதனால் மதுரையில் சுற்றுலா மேம்படும்.. உலகின் முக்கிய நகரங்களில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து உலகின் முக்கிய நகரங்களுக்கும் இனி செல்ல முடியும். விவசாயிகளால் காலையில் பறிக்கப்படும் மல்லி அன்று மாலைக்குள் பாரீஸ், நியூயார்க்கு கொண்டு செல்லப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.
Mar 11, 2026, 6:43 pm IST

தமிழ் புதல்வர் துணை குடியரசு தலைவர் ஆகியிருக்கிறார் - மோடி

கடந்த முறை தமிழகம் வந்த போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தேன்.. தமிழ்நாட்டின் புதல்வர் சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் ஆகியிருக்கிறார்..
Mar 11, 2026, 6:40 pm IST

திருச்சி என்.டி.ஏ கூட்டத்தில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, திருச்சியில் உங்கள் முன்பு நான் இருப்பது மிகவும் அற்புதமான தருணம். வீரத்துக்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி.. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.. திமுக அரசை தூக்கி எறிய மக்கள் விரும்புகிறார்கள்.. என்.டி.ஏவால் மற்றுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புவதாக மோடி பேசினார்.
Mar 11, 2026, 6:36 pm IST

அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
Mar 11, 2026, 6:36 pm IST

எல்லாரும் நலமுடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன் - திருச்சி என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
Mar 11, 2026, 6:36 pm IST

திருச்சி நகரில் மக்களின் மத்தியில் நான் இருப்பது பெருமையாக உள்ளது - பிரதமர் மோடி
Mar 11, 2026, 6:33 pm IST

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு தான் திமுக.. தேர்தல் வந்தால் வாக்குறுதி அளிப்பார்.. தேர்தல் முடிந்தால் அவ்வளவு தான்.. மூன்றில் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் இது.. ஸ்டாலினுக்கு நியாபக மறதியால் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறார்..- எடப்பாடி பழனிசாமி
Mar 11, 2026, 6:31 pm IST

கட்சி கிடையாது.. கார்ப்பரேட் கம்பெனி

எத்தனை முறை, எத்தனை கூட்டங்கள் போட்டாலும் உங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒரே குரல் தான் தமிழகம் முழுக்க ஒலித்துக்கொண்டு இருக்கிறது.. ஸ்டாலின் குடும்ப ஆட்சிக்கு இது இறுதி தேர்தல்.. திமுக என்பது கட்சி கிடையாது.. கார்ப்பரேட் கம்பெனி.. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் தலைவர்களாக வர முடியும் - எடப்பாடி பழனிசாமி
Mar 11, 2026, 6:28 pm IST

நாங்கள் தான் வலிமையான கூட்டணி - எடப்பாடி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை வணங்கி பொதுக்கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்கிறேன். எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. முதல்வர் ஸ்டாலின் அவர்களே நாங்கள் தான் வலிமையான கூட்டணி.. அற்புதமான கூட்டணி.. பரஸ்பர கூட்டணி.. திமுக - காங்கிரஸ் இடையே 20 நாட்களாக வார்த்தைப்போர் நடந்தது.. எடப்பாடி பழனிசாமி
Mar 11, 2026, 6:22 pm IST

2 மாதங்களில் முதல்வராக எடப்பாடி பதவி ஏற்பார் - அன்புமணி

திமுக ஆட்சியை அகற்றுங்கள்.. இன்னும் இரண்டு மாதங்களில் முதல்வராக எடப்பாடி பதவியேற்பார். தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமையும். ஊழல் ஆட்சி, சாராய ஆட்சியை அகற்றுங்கள் என மக்களை கேட்டுக்கொள்கிறேன் - அன்புமணி
Mar 11, 2026, 6:16 pm IST

திமுக அரசு மதுவை திணிக்கிறது - அன்புமணி

இந்தியாவில் அதிக கொலைகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.. இந்தியாவிலேயே அதிக மது விற்பனை நடக்கும் மாநிலம் தமிழகம்.. தமிழகத்தில் திமுக ஆட்சி மதுவை விற்பனை செய்யவில்லை.. திணிக்கின்றது.. பெண்களுக்கு எதிராக 44 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளன. - அன்புமணி ராமதாஸ்
Mar 11, 2026, 6:16 pm IST

குஜராத்தும் திராவிட ஆட்சி நடந்த இடம் தான் - தினகரன்

தமிழக முதல்வர் எல்லா கூட்டத்திலும் சொல்கிறார் இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையேயானது என்று.. பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தான் ஆட்சி செய்ய முடியும். தமிழகத்தில் இருந்து ஆட்சி செய்ய முடியாது.. டெல்லியில் இருந்து ஆண்டாலும் மோடி குஜராத்தை சேர்ந்தவர்.. குஜராத்தும் திராவிட ஆட்சி நடந்த இடம் தான்.. மோடிக்கும் தமிழ்நாட்டுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. மக்கள் விரோத ஆட்சியை அகற்றி, பச்சை தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மா அவர்களின் ஆசியோடு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம்.. - தினகரன்
Mar 11, 2026, 6:06 pm IST

திருச்சி பஞ்சப்பூரில் நடக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் போட்டி என்று சொன்னார்.. நான் சொல்கிறேன், குடும்ப ஆட்சிக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான தேர்தல் என்று.. ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது தாய்மாமன் சீர் கொண்டு வருவது போல் திட்டங்களை அறிவித்து வருகிறார். இன்றைக்கு கூட ரூ.5,655 கோடி திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்” என்றார்.
Mar 11, 2026, 6:05 pm IST

குடும்ப ஆட்சிக்கும் மக்களுக்குமான தேர்தல்

முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் போட்டி என்று சொன்னார்.. நான் சொல்கிறேன், குடும்ப ஆட்சிக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான தேர்தல்.. ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது தாய்மாமன் சீர் கொண்டு வருவது போல் திட்டங்களை அறிவித்து வருகிறார். இன்றைக்கு கூட ரூ.5,655 கோடி திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.
Mar 11, 2026, 6:04 pm IST

என்.டி.ஏ கூட்டணி மேடைக்கு வந்த பிரதமர் மோடி

திருச்சி பஞ்சப்பூரில் நடக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், ஜிகே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினர்.
Mar 11, 2026, 5:58 pm IST

ஸ்தம்பித்த திருச்சி - மதுரை ஹைவே

பிரதமர் மோடி பஞ்சப்பூரில் நடக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவை மற்றும் கூட்டணியை சேர்ந்த கட்சியினர் அதிகளவில் குவிந்துள்ளதால் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Mar 11, 2026, 5:53 pm IST

ஆங்கிலத்திலேயே பேசிய பிரதமர் மோடி

கடந்த முறை பிரதமர் மோடி மதுரை வந்திருந்த போதும் இந்தி மொழியை தவிர்த்து ஆங்கிலத்தில் தான் பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று நடந்த அரசு விழாவிலும் அவர் ஆங்கிலத்திலேயே உரையாற்றினார்.
Mar 11, 2026, 5:50 pm IST

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கடந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழாவில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த முறை மதுரை வந்திருந்தேன். அப்போது மேம்படுத்தப்பட்ட 8 ரயில் நிலையங்களை திறந்தோம். - பிரதமர் மோடி
Mar 11, 2026, 5:46 pm IST

ரூ.3700 கோடி எரிவாயு விநியோக குழாய் திட்டம் மூலமாக 9 லட்சம் குடும்பங்கள் பயனடையும். பாரத் பெட்ரோலிய நிறுவனம் மூலமாக 9 லட்சம் குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் கேஸ் வழங்கப்படும். பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசுபாடு குறையும். 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இந்த இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் - பிரதமர் மோடி
Mar 11, 2026, 5:42 pm IST

தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு இந்த நாள் முக்கியமானது. தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் - பிரதமர் மோடி
Mar 11, 2026, 5:38 pm IST

கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தில் தமிழ்நாட்டில் 370 கிமீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை மோடி திறந்து வைத்தார்.
Mar 11, 2026, 5:36 pm IST

5 ரயில் சேவைகள் துவங்கி வைப்பு

தமிழகத்தில் 5 புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நாகர்கோவில் - சர்லாபள்ளி, போத்தனூர் - தன்பாத், ராமேஸ்வரம் - மங்களூர் மற்றும் 2 அம்ரித் பாரத் ரயில் சேவை என மொத்தம் 5 ரயில் சேவைகளை மோடி தொடங்கி வைத்தார்.
Mar 11, 2026, 5:34 pm IST

தமிழகத்தில் 5 புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்
Mar 11, 2026, 5:34 pm IST

நாகர்கோவில் - சர்லாபள்ளி, போத்தனூர் - தன்பாத், ராமேஸ்வரம் - மங்களூர் இடையே ரயில் சேவை தொடங்கி வைத்தார்
Mar 11, 2026, 5:27 pm IST

திருச்சி பஞ்சப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது பிரதமர் மோடிக்கு தங்கம் தென்னரசு பொருநை அருங்காட்சியகம் நினைவுப்பரிசினை வழங்கினார்.
Mar 11, 2026, 5:22 pm IST

திருச்சி பஞ்சப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். மொத்தம் 5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கிறார்.
Mar 11, 2026, 5:21 pm IST

திருச்சி பஞ்சப்பூரில் அரசு விழா மற்றும் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வந்து உள்ளார். திருச்சி விமான நிலையம் வந்த அவருக்கு அரசு அதிகாரிகள் மற்றும் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த முறை தமிழரின் பாரம்பரிய ஆடையான பட்டு வேட்டி சட்டையில் வந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+