உக்ரைனிலிருந்து வந்த மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நீட் தடையாக இருக்கிறது: செஞ்சி மஸ்தான்
திருச்சி: "உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதியிலயே கைவிவிட்டு வந்த மாணவர்களை தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதற்கு நீட் ஒரு பெரிய தடையாக உள்ளது" என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போர் தொடங்கிய சில வாரங்களிலேயே அங்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வந்த இந்திய மாணவர்கள் தாய்நாடு அழைத்து வரப்பட்டனர்.
அதே சமயத்தில், உக்ரைனில் அந்த மாணவர்கள் பாதியிலேயே கைவிட்டு வந்த படிப்பை இங்கு தொடர்வதில் பெரும் சிக்கல் உள்ளது. பொறியியல், கலை போன்ற மற்ற துறைகளை காட்டிலும் மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு வந்த மாணவர்களை இங்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது முடியாத காரியமாக உள்ளது.

தமிழகம் தொடர்ந்து கோரிக்கை
இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உள்ளிட்ட பல மாநில அரசுகள் மத்திய அரசிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் எடுத்துக் கூறிவிட்டன. ஆனால், இதுவரை மத்திய அரசிடம் இருந்து நேர்மறையான பதில் ஏதும் வரவில்லை.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திருச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக, குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரைச் சேர்ந்த முத்துக்குமரனின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார்.அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விழிப்புணர்வு வேண்டும்
முத்துக்குமரன் வேலைக்காக குவைத்துக்கு சென்று அங்கு உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. வெளிநாடு தமிழர்களுக்காகவே தமிழ்நாட்டில் ஒரு துறை உள்ளது வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகவே இந்த துறையை முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.

வெளிநாட்டு தமிழர்களுக்கு உதவி
வெளிநாடுகளில் வேலைக்கு சென்றவர்களில் கடந்த ஆண்டு 152 பேரும், இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவந்துள்ளோம். அதே போல, வெளிநாட்டுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும், இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களையும் நாங்கள் அழைத்து வந்துள்ளோம்.

உக்ரைன் மருத்துவ மாணவர்கள்...
உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதிலேயே கைவிட்டு வந்த மாணவர்களை தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் தமிழகத்தில் சேர்ப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு ஒரு பெரிய தடையாக உள்ளது.
பொறியியல், வேளாண்மை படிப்பை பாதிலியே விட்டு உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால்
மருத்துவப்படிப்பில் சேர்க்க முடியாத நிலை நீட் தேர்வால் உருவாகியுள்ளது.
எனவே அந்த மாணவர்களுக்கும் உரிய மருத்துவப்படிப்பை இங்கேயே வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications