காஷ்மீர் பாணியில் தமிழகத்தில் நிலைமை மாறும்.. பாஜக துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாது.. ஹெச் ராஜா
திருச்சி: தமிழகத்தில் பாஜக துணை இல்லாமல் 2021ல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியும், உமர் அப்துல்லாவும் சொந்தமாக ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜக ஆதரவை கோரி மெகபூபா ஆட்சி அமைத்தது போல் தமிழகத்திலும் மாறும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசுகையில், "மொழிக் கொள்கைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தப் பார்க்கும் எதிர்கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை
இருமொழிக் கொள்கைதான் வேண்டும் என பேசுவோர் சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளில் இருந்து தங்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை சமச்சீர் பள்ளிகளில் சேர்த்து விட்டுப் பேசட்டும். இல்லை என்றால் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும்.

காஷ்மீர் மாதிரி மாறும்
தமிழகத்தில் பாஜக துணை இல்லாமல் 2021ல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த அளவுக்கு வலிமையான இடத்தில் பாஜக இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியும், உமர் அப்துல்லாவும் சொந்தமாக ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜக ஆதரவை கோரி மெகபூபா ஆட்சி அமைத்தது போல் தமிழகத்திலும் நிலைமை மாறும்.

காங்கிரஸ் தலைவர்
ஒருவேளை தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை வந்தால், அது அக்கட்சியின் தலையெழுத்து. அதைப் பற்றி நான் கருத்து கூற முடியாது. போதிய கால அவகாசம் கொடுத்தும் கூட இதுவரை மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார் செய்யாமல் இருந்தது யார் தவறு?. இதற்கு மத்திய அரசு எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் முறைகேடு நிகழ்ந்திருப்பது வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடு செய்யும் அலுவலர்கள் எந்த அரசுப் பணியிலும் இனிமேல் தொடர முடியாத அளவுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications