ரொம்ப நன்றி சார்... நல்ல வருமானம்.. திரும்பவும் திருச்சிக்கு வருவோம்.. உருகும் வடமாநில இளைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்த 140 வட மாநில இளைஞர்கள் வருகிற 10ம் தேதி அவரது சொந்த ஊருக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட உள்ளார்கள்.

திருச்சி மாவட்டத்தில் மேற்கு வங்காளம், மும்பை, பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து வடமாநில வாலிபர்கள் பல்வேறு தொழிலுக்காக வந்து தங்கிவேலை பார்த்து வருகிறார்கள்.

Norther indians youth Going hometown from Trichy on the 10th may

திருச்சி பொன்னகரம் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருமணம், அரசியல் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பிரமாண்டபந்தல் அமைப்பதுதோரணம் கட்டுவது போன்ற பணிகளில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் திருச்சியில் வைரஸ் பாதிப்பால் திருமணம், அரசியல், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் போன்ற பணிகள் நடை பெறவில்லை.

எனவே இந்த வடமாநில வாலிபர்கள் வேலை இல்லாமல் தவித்தனர். இந்தநிலையில் வடமாநில வாலிபர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து திருச்சி செ‌ஷன்ஸ்கோர்ட் போலீசார் மூலம் இவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த 140 வட மாநில வாலிபர்கள் வருகிற 10ம் தேதிஅவரது சொந்த ஊருக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேற்கு வங்காளம் பகுதிகளில் அதிக அளவில் விவசாயத்திற்கு தான் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அங்கு அதற்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் பந்தல் அமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இதில் நல்ல வருமானம் கிடைப்பதால் இங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்ததாக அவர்கள் கூறினர். மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதும் திருச்சிக்குவர ஆர்வமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம், போலீசார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+