பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா?.. திறக்கும் தேதி இன்று அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
திருச்சி: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படுமா? என பெற்ற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பள்ளி திறக்கப்படும் தேதி இன்று அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தேர்வுகள் முடிந்த பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

அதேபோல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உள்ளிட்ட பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் 10 ,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தற்போது பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து வரும் நிலையில், ஜூன் 1-ந் தேதி, 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்படுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கூட செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏற்கனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.
எனினும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், நேற்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நாளை (அதாவது இன்று) அறிவிக்கப்படும்" என்றார். மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு கூறினார். இதனால், கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிபார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications