மிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்!
15 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு 12 வருட சிறை தண்டனை கிடைத்துள்ளது
திருச்சி: பலமுறை மிரட்டி மிரட்டியே... மகளின் தோழியை கர்ப்பமாக்கிய பரோட்டோ மாஸ்டருக்கு 12 வருஷம் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
திருச்சி திருவானைக்காவல் மணல்மேடு 5-ம் பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். 40 வயதாகிறது. இவர் ஒரு பரோட்டா மாஸ்டர். கல்யாணமாகி 15 வயதில் மகள் இருக்கிறாள். அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம்வகுப்பு படித்து வரும் மகளுக்கு தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று ஒரு தோழி உள்ளாள்.

இவர்கள் வீடு பக்கத்துலயே இருப்பதால், 2 தோழிகளும் அடிக்கடி செல்வதுண்டு. அப்படி, மகளை பார்க்க வரும் தீபாவிடம் நடராஜனும் நன்றாக பேசுவார். ஆனால் தீபா மீது ஒருவித மோகம் இருந்து கொண்டே இருந்தது.
எப்படியாவது தீபாவை அடைய வேண்டும் என்று விபரீத ஆசை வந்துவிட்டது. அதனால், மகளை தேடி வீட்டுக்கு தீபா வரும்போதெல்லாம் அவளை கட்டாயப்படுத்தி நாசம் செய்துள்ளார். அந்த சமயங்களில் மகளும், மனைவியும் வீட்டில் இருப்பது கிடையாது. இப்படியே பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் 40 வயது நடராஜன்!
இதில் தீபா கர்ப்படைந்து விட்டாள். விஷயம் தெரிந்து வீட்டில் அதிர்ந்து போன பெற்றோர், இதை பற்றி கேட்கவும்தான் பரோட்டா மாஸ்டரின் வண்டவாளம் வெளியே தெரிந்துள்ளது. 17-11-2017 அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து, தீபாவின் பெற்றோர் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசில் புகார் செய்யவும், நடராஜன் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே தீபா திடீரென கீழே விழுந்ததால், அந்த கர்ப்பமும் கலைந்துவிட்டது.. படிப்பும் அப்படியே நின்றுபோய்விட்டது! இந்த இதுநாள் வரை இது தொடர்பான வழக்கும், திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி வனிதா தீர்ப்பு கூறியுள்ளார். மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய நடராஜனுக்கு 12ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மகளின் தோழி என்றுகூட பார்க்காமல், பலமுறை மிரட்டி மிரட்டியே சீரழித்த பரோட்டா மாஸ்டர் இப்போது கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications