திருச்சியில் கருஞ்சட்டை பேரணி… பெரியார் முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருச்சி : பெரியார் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற கருஞ்சட்டை பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.
சாதி, ஏற்ற தாழ்வை போக்கி, சமூக நீதியை நிலை நிறுத்தி, மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்மானத்தோடு ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என இறுதிவரை போராடியவர் தந்தை பெரியார்.

ஆனால் பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும் அவருக்கு எதிராகவும், அவரது கொள்கைகளுக்கு எதிராகவும் சிலர் தற்போதும் தமிழகத்தில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், தந்தை பெரியாரின் நினைவுதினம் நாளை அனுசரிக்கப் படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி பெரியார் சிந்தனைகளை விளக்கும் வகையில் கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாட்டுக்கு திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த பேரணி மற்றும் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளன.
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். அரசியல் சார்பற்ற பெரியாரிய அமைப்புகள் பேரணியில் பங்கேற்றன.
பறையிசை முழங்க, கருப்பு சட்டை அணிந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பெரியாரிய முழக்கமிட்டவாறே ஊர்வலமாக சென்றன. பேரணியை முன்னிட்டு திருச்சி நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications