Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்.. ஒரு ஆண்டில் கட்டுமான பணிகள் முடியும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சூரியூரில் ரூ.3 கோடி செலவில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த மைதானம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மட்டுமின்றி, அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த திடலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. அந்த வகையில் மதுரைக்கு பின் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்ற ஒன்றாகும். இன்று நடைபெற்று வரும் சூரியர் ஜல்லிக்கட்டில் 800க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றுள்ளன.

anbil mahesh jallikattu stadium

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களுக்கு பரிசளித்தார். இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் பங்கேற்று பரிசை வென்றது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக பரிசு வழங்கியது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக நிரந்தர மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அது தேர்தல் நேரத்திலேயே அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுதான். அதனால் ஜல்லிக்கட்டு மைதானம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.

அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினோம். இதனை ஏற்று, சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, அடுத்த பொங்கலின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அந்த ஸ்டேடியத்தில் நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் இதற்கான இடத்தை ஊர் மக்கள் தான் தேர்வு செய்து கொடுத்துள்ளனர்.

மதுரையை போல் அல்லாமல் ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிகளை நடத்துவோம். அதேபோல் அந்த மைதானம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல், மற்ற விளையாட்டுகளுக்கும் சேர்த்து தான் மைதானம் உருவாக்கப்படும். கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளையும் விளையாடும் வகையில் மைதானம் உருவாக்குவோம். ஆண்டில் ஒருநாளுக்காக அந்த மைதானம் உருவாக்கப்பட கூடாது.

அனைத்து நாட்களிலும் பயன்படும் வகையில் கட்டுவோம். அதேபோல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு என்றாலே அனைத்து பகுதிகளுக்கும் சென்று பங்கேற்க கூடியவர். அவரையும் இங்கு பார்த்தது மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும், ரூ.3 கோடியில் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகளை தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+