திருச்சி வந்த பிரதமர் மோடி.. ஏர்போர்ட்டில் வரவேற்ற தலைவர்கள்.. யார் யார்? பாருங்க
திருச்சி: 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி இன்று இரவு தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்ததோடு, பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருச்சி புறப்பட்டு வந்த மோடியை அமைச்சர் கே என் நேரு உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மோடியை சந்தித்து பேசினார்.
பிரிட்டன், மாலத்தீவுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் சென்ற மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். இன்று, நாளை என 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார். இரவு 7.30 மணியளவில் மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த பிரதமர் மோடி, தமிழக பாரம்பரியப்படி வெள்ளை சட்டை, வேஷ்டியில் வந்திருந்தார்.

அப்போது விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை பரிசாக வழங்கினார். அமைச்சர் கே என் நேரு, கனிமொழி எம்பி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அடுத்ததாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி இரவு திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10.35 மணிக்கு வந்த பிரதமா் மோடிக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவி, எல். முருகன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என். நேரு, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் மற்றும் துரை வைகோ எம்.பி, உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார்.
பிரதமர் மோடி நாளை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அங்கு ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை அவர் வெளியிடுகிறார். முன்னதாக திருச்சியில் ஓட்டலில் எடப்பாடி மோடி சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் தனியாக சந்தித்து பேசவில்லை.
இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, அவர் தங்கியிருக்கும் தனியார் ஓட்டலில் சந்திக்க உள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications