வேனுக்குள் நடிகையுடன்.. எஸ்கேப்பாகி ஓடி கொண்டிருக்கும் எய்ட்ஸ் முருகன்.. கைது செய்ய போலீஸ் தீவிரம்!
முருகனை விரைவில் கைது செய்வோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
Recommended Video
திருச்சி: எய்ட்ஸ் நோய் பாதித்த முருகனை போலீசார் கைது செய்யும் கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். வேனுக்குள்ளேயே ரவுண்டு கட்டி வரும் லலிதா ஜுவல்லரி கொள்ளை கேங் லீடர் முருகனை அதி தீவிரமாக தேடி வருகிறார்கள்.
லலிதா ஜுவல்லரி கடையில் திருட்டு நடந்து இத்தனை நாள் ஆகியும், இன்னும் முக்கிய குற்றவாளி முருகன் கைதாகாமலேயே எஸ்.ஆகி வருகிறான்.
சுவற்றில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைரநகைகளை அள்ளி சென்றனர் கொள்ளையர்கள். நைட் வாட்ச்மேன்கள் 6 பேர் இருந்தும் பிரயோஜனமில்லை. கடையில் சிசிடிவி கேமராவும் சரியாக வேலை செய்யவில்லை. இதைதவிர சாதாரண நகை கடைகளில் இருக்கும் அலாரம் கூட, இந்த கடையில் இல்லாதது மிகப்பெரிய ஆச்சரியம்! இதெல்லாம்தான் கொள்ளையர்களுக்கு சாதமாக போய்விட்டது.

கொள்ளை
கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டார்களே.. அதில் இருப்பது சுரேஷூம், முருகனும்தானாம். கடைக்குள் நுழைந்ததும், கையில் கிடைத்த நகைகளை எடுத்து கருப்பு & சிவப்பு பைகளில் போடுகிறார் சுரேஷ். இதைக் கவனித்த முருகன், "அதை ஏன் எடுக்கிறே.. முதல்ல பெரிசு எடுத்து உள்ளே போடு" என்று பெரிய நகைகளை கைகாட்டி சைகை செய்வதும் இப்போது தெரியவந்துள்ளது.

காட்டுப்பகுதி
7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் 2-வது நாளே கொள்ளையன் மணிகண்டன் சிக்கினான். கொள்ளை அடித்தது மொத்தம் 8 பேர். ஆளுக்கு 5 கிலோ நகையை பங்கு போட்டு கொள்ள காட்டுப்பகுதிக்குள் ஒதுங்கி உள்ளனர்.

தப்பி ஓட்டம்
அங்கே நகையை பிரித்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் தப்பி ஓட முயன்றபோதுதான் மணிகண்டன் சிக்கியது. அதை தொடர்ந்து சுரேஷூம், அவரது அம்மா கனகவள்ளியும் சிக்கியது. இன்னும் கொள்ளையில் கைதாகி உள்ள உறவினர்கள், தெரிந்தவர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

எய்ட்ஸ்
இதில் முக்கியமானவன் முருகன்தான். கொள்ளை அடித்ததில் முருகனுக்கு மட்டும் 8 கிலோ நகையாம். ஏற்கனவே எய்ட்ஸ் வந்த முருகன், ஒரு வேனில்தான் பயணித்து வருகிறானாம். அந்த வேனுக்குள் எல்லா மருத்துவ வசதியும் இருக்கிறதாம். இப்போது முருகனை பிடிக்கத்தான் போலீசார் தீவிரம் காட்டுகிறார்கள். முருகனுடன் ஒரு துணை நடிகையும் தலைமறைவாக இருக்கிறாராம். யார் அந்த துணை நடிகை என்று தெரியவில்லை. முருகன் சிக்கினால்தான் பல கொள்ளைகளுக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள்.

துணை நடிகை
இந்த முருகன் வேகமாக கார் ஓட்டுபவனாம். கார் டிரைவிங்கில் இவனை அடித்து கொள்ள ஆள் இல்லையாம். அதனால் பல சமயங்களில் போலீசாரையே ஏமாற்றி தப்பித்து இருக்கிறான். அதனால் இந்த முறை எப்படியாவது முருகனை பிடித்துவிட வேண்டும் என்பதே நம் போலீசாரின் முதல் எண்ணமாக இருக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications