நான் உசுரோட இருக்கேன்.. அவர் 2வது கல்யாணம் கட்டி ஜாலியா இருக்கார்.. டிஐஜியிடம் குமுறிய மனைவி!
திருச்சி: திருச்சியில் முதல் மனைவி இருக்கும் போதே 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஐ.ஜி. ஆனி விஜயாவிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், தெற்கு காட்டூர் காவேரி நகரைச் சேர்ந்தவர் ராஜாத்தி என்ற கோகிலா (30). இவரது கணவர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு பிலோமின் பிரபு (11), டேனியல் ராஜ பிரபு (9) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் கோகிலா தனது 2 மகன்களுடன் திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகம் வந்தார். அங்கு டி.ஐ.ஜி. ஆனி விஜயாவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

ஆயுதபடை
அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது கணவர் திருச்சி மாநகர ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்தார். 5 ஆண்டுகளாக திருச்சி மாநகர போலீசில் பணியாற்றும் திருமணமான பெண் போலீஸுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது திருமணம் செய்துள்ளார்.

பெண் போலீஸ்
இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டே மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். பெண் போலீசின் கணவரும் புகார் கொடுத்துள்ளார். உடனடியாக என் கணவரை குன்னூருக்கும், பெண் போலீசை தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் விடுமுறை தினத்தில் திருச்சி சிந்தாமணியில் உள்ள பெண் போலீசின் வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தினர்.

துன்புறுத்தி
ஒருமுறை கோட்டை மகளிர் போலீஸுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து இருவரையும் வீட்டில் கையும் களவுமாக போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி விட்டனர். கடந்த 18-ந் தேதி கணவர், குன்னூரில் இருந்து விடுமுறையில் வந்தவர் என்னையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

புகார் மனு
நான் உயிருடன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்த எனது கணவர் மீதும், அவரை 2-வது திருமணம் செய்த பெண் போலீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications