திருவாரூர் திருடன்.. முரட்டு முருகன்.. 11 வருஷ சர்வீஸ்.. அதிர வைக்கும் கதை.. வலை வீசும் போலீஸ்

லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lalitha Jewellery | திருட்டு கும்பலின் தலைவனான திருவாரூர் முருகன் யார்?-வீடியோ

    திருச்சி: கிலோ கணக்கில் லலிதா ஜுவல்லரி கடை நகையை திருட்டில் மூளையாக செயல்பட்டது தேசிய அளவிலான கொள்ளையன் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து முருகைனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மிகப்பெரிய நெட் ஒர்க் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே நம் போலீசார் சந்தேகித்து வந்தனர். அதன்படியே கொள்ளையை நடத்தியது நாடு முழுக்க கைவரிசையை காட்டிய முருகன் என்பவன்தான் என போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    நேற்று பைக்கில் சிக்கிய 2 பேரில் ஒருவன்தான் சுரேஷ். இந்த சுரேஷ் போலீசாரை பார்த்ததும் தப்பிவிட்ட நிலையில்தான், அவன் பிரபல கொள்ளையன் முருகனின் தம்பி என்று தெரியவந்தது. இதையடுத்துதான் லலிதா ஜூவல்லரி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் முடிவு செய்தனர்.

     பர பர பின்னணி

    பர பர பின்னணி

    இப்போது இந்த கொள்ளையன் முருகன் பற்றிய பரபர தகவல்களையும் போலீசார் தெரிவித்துள்ளனர். முருகனுக்கு ஒரு பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் சின்ன வயசு கனவாம்.. அதுதான் லட்சியமாம். இதற்காகவே பாலமுருகன் என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கி உள்ளான். முருகனின் முதல் படம் - மனாசா வினாவா என்பது. 50 லட்சம் முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறான்.

     பட கம்பெனி

    பட கம்பெனி

    அந்த படத்தில் நடித்த ஹீரோயினுக்கு வெறும் 6 லட்சம் ரூபாய்தான் சம்பளமும் தந்திருக்கிறான். இந்த படத்தில் கொள்ளையன் சுரேஷும் நடித்திருக்கிறானாம். ஆனால் இந்த படம் வெளியாகாமலேயே போய்விட்டது. இதனால் நொடிந்து போன முருகன், விட்டதை பிடிக்க கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். ஆரம்பத்தில் சின்ன சின்ன திருட்டு என ஆரம்பித்து, பிறகுதான் பெரிய திருட்டுக்கு மாறியுள்ளான்.

     பெங்களூரு

    பெங்களூரு

    இதற்காகவே குழு அமைத்து திருட ஆரம்பித்தான். தாஹி அலி தலைமையில் டெல்லியில் பல குற்ற செயல்களிலும் முருகன் ஈடுபட ஆரம்பித்தான். பிறகு தனது ஜாகையை பெங்களூருக்கு மாற்றினான். அங்கு ஐடி கம்பெனிகள் அதிகம் என்பதால் கொள்ளைக்கு வசதியாக போயிற்று. அதனால் பெங்களூரில் மட்டும் முருகன் மீது 180 கேஸ்கள் உள்ளனவாம். பிறகு 2011-ல் ஜாமீனில் பெங்களூரில் இருந்து வெளியான முருகன் ஹைதராபாத் போய் தன் திருட்டை தொடர்ந்திருக்கிறான்.

     ஹைதராபாத்

    ஹைதராபாத்

    அதுவரை கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை வைத்து, 2-வது படம் ஆத்மா என்ற பெயரில் எடுக்கவும் ரெடி ஆனான். அது நடக்கவில்லை. கொள்ளை அடித்ததை கொண்டு சினிமா கம்பெனியில்தான் முதலீடு செய்ததாக ஏற்கனவே பெங்களூரில் போலீசிலும் முருகன் வாக்குமூலம் தந்துள்ளான். அங்கு நெருக்கடி முற்றியதால்தான் ஹைதராபாத்துக்கு வந்துவிட்டான். நகைக் கடை மட்டுமல்ல, வீடுகள், வங்கிகள் என எல்லா இடங்களிலும், எல்லா மாநிலங்களிலும் முருகனின் கைவரிசை உள்ளது.

     ஸ்பெஷலிஸ்ட்

    ஸ்பெஷலிஸ்ட்

    மக்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணம் பறிப்பவதில் முருகன் ஸ்பெஷலிஸ்ட் என்கிறார்கள். 200 கைது வாரண்ட்கள் வரை நிலுவையில் உள்ளதாம். நெல்லையில் தினகரன் என்ற ஒரு கூட்டாளி உள்ளானாம். இவனுடன் மட்டும் சேர்ந்து முருகன் 800 கொள்ளைகளை நடத்தி உள்ளான்.

     திடுக் தகவல்கள்

    திடுக் தகவல்கள்

    இப்போது முருகனின் சொந்தக்காரர்கள் திருவாரூர், நாகை என பல பகுதிகளில் இருப்பதால், அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கைவரியை காட்டிய இந்த திருவாரூர் திருடன் முருகன் சிக்கினால், பல திடுக் தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+