வீட்டில் என்ன பிரச்சினையோ.. நைட் டூட்டி முடித்து வீடு திரும்பிய போலீஸ்காரர்.. தூக்கில் தொங்கினார்

திருச்சியில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. நைட் டியூட்டி முடித்து வீட்டுக்கு வந்த போலீஸ்காரர் நடுராத்திரி பெட்ரூமிலேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டார்!

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா.. இவருக்கு வயது 38 ஆகிறது... மனைவி பெயர் சர்மிளா.. இவர்களுக்கு 2 குழந்தைகள்.. மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். வயர்லெஸ் சாலை, அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

policeman committed suicide near tirchy

திருவெறும்பூர் போலீஸ் காவல்நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வந்தார்.. நேற்றிரவு நைட் டியூட்டிக்கு முடித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளார்.. பிறகு 1 மணி இருக்கும்.. அப்போது பெட்ரூமிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷேக் அப்துல்லா தூக்கில் தொங்கியதால் அலறி துடித்தனர் குடும்பத்தினர்.

தகவலறிந்து விமான நிலைய போலீஸார் விரைந்து அவரது உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. ஷேக் அப்துல்லா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என உறுதியாக தெரியவில்லை.

ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் முதல் கட்டமாக கூறப்படுகிறது.. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.. நைட் டியூட்டி முடித்துவிட்டு வந்த போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சக காவலர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+