கர்ப்பிணி மனைவி கழுத்தை அறுத்த கணவன்.. தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டதால் பரபரப்பு.. திருச்சியில்!
கர்ப்பிணி மனைவி கழுத்தை அறுத்துள்ளார் கணவன்
Recommended Video

திருச்சி: கர்ப்பிணி என்றும் பாராமல், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்தவர் கமல்காந்த்.. 33 வயதாகிறது.. இவரது மனைவி ஜீவிதா.. 26 வயதாகிறது.

இருவருக்கும் கடந்த வருடம் கல்யாணம் ஆனது.. இப்போது ஜீவிதா கர்ப்பமாக இருக்கிறார். கமல்காந்த் என்ஜினியராக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.. இப்போது வந்த நிலையில் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் உள்ளார் .
இந்நிலையில் கணவன் - மனைவி இடையே வீட்டில் தகராறு எழுந்துள்ளது.. அவர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கமல்காந்த் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்துவந்து மனைவி கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார் .
மேலும் தனது கையையும் அதே கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.. ரத்தம் சொட்ட சொட்ட மாடியிலிருந்து மகன் கீழே இறங்கி வந்ததை பார்த்த தாய் அலறி சத்தம் போட்டார்.. இந்த அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
மருமகள் கொலை, மகன் படுகாயத்துடன் இருப்பதை கண்டு அலறி அடித்த அவர்கள் உடனடியாக முசிறி ஸ்டேஷனில் புகார் தந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவிதாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கமல்காந்த் முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணி மனைவியை கணவனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications