ஸ்ரீரங்கம் வரும் பிரதமர் மோடி.. 5 அடுக்கு பாதுகாப்பு.. ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க பக்தர்களுக்கு தடை
திருச்சி: பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதால் சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை கோயிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரதமா் வருகைக்காக உச்சபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் திருச்சி மாநகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சிக்கு வருகை தரும் பிரதமருக்காக ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் அருகே பிரத்யேக ஹெலிபேட் மைதானம் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படை அதிகாரிகளும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்புப் பணிகளையும் மேற்பாா்வையிட்டு வருகின்றனா்.

பாரதப் பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை சென்னைக்கு வருகிறார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடக்கி வைக்கும் மோடி இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமானநிலையத்துக்கு சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு வருகை தருகிறாா். பின்னா், விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலமாக ஸ்ரீரங்கம் ஹெலிபேட் தளத்துக்கு வந்து இறங்குகிறாா்.
காா் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் பிரதமா், கோயிலின் அனைத்து சன்னதிகளையும் பாா்வையிட்டு தரிசனம் செய்யவுள்ளாா். 11 மணியிலிருந்து 12.40 மணி வரை திருக்கோயிலில் இருக்கும் பிரதமா், பின்னா் காா் மூலம் ஸ்ரீரங்கம் ஹெலிபேட் தளத்துக்கு வந்து அங்கிருந்து 12.55 மணிக்கு ஹெலிகாப்டா் மூலமாக ராமேஸ்வரம் புறப்பட்டு செல்கிறாா்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் வியாழக்கிழமை அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமா் வருகைக்காக திருச்சி மாநகரில் வியாழக்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படை அதிகாரிகளும் திருச்சியில் முகாமிட்டு கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனா். திருக்கோயிலைச் சுற்றியுள்ள கட்டடங்கள், உயரமான இடங்களுக்குச் சென்று அங்கிருந்து காவலா்களை நியமித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹெலிபேட், திருக்கோயில் வரை வாகனத்தில் செல்லும் வழித்தடம் ஆகியவற்றையும் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.
இதனை பாா்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து மாநகரக் காவல்துறைக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். வெள்ளிக்கிழமை முதல் திருக்கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகள் முழுவதும் சிறப்புப் பாதுகாப்பு படை வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. சனிக்கிழமை உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. காவல்துறை சாா்பில் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
பிரதமா் வருகை தரும் யாத்ரி நிவாஸ் அருகே கொள்ளிடம் மஞ்சக்கரை பகுதியில் இறங்குதள மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 3 இறங்கு தளங்கள் தயாா்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மைதானத்தையும் சிறப்புப் பாதுகாப்பு படையினா் வியாழக்கிழமை முதல் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனா்.
மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை, பிரதமரின் பாதுகாப்பு படை என மூன்று தரப்பிலிருந்தும் திருச்சி விமானநிலையம் தொடங்கி திருக்கோயில் பிரகாரம் வரையில் வியாழக்கிழமை ஒத்திகை மேற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள், போக்குவரத்து மாற்றம், பொதுமக்கள், கடைகளுக்கான அனுமதியளிக்கும் எல்லை தொடா்பாக ஆலோசித்தனா்.
ஸ்ரீரங்கம் பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன் அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டுமே கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அனுமதிக்கப்பட உள்ளனா். பிரதமா் வருகைக்காக உச்சபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் திருச்சி மாநகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமரின் வருகையையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி, பகவான் ராமரின் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதரையும், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமியையும் தரிசனம் செய்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டராம சுவாமியையும் வழிபட்டு புனித தீர்த்தத்தையும் தனது கைப்பட எடுத்து செல்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை, திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications