திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி.. ஆளுநர், முதல்வர் வரவேற்றனர்.. வழிநெடுக பாஜகவினர் வரவேற்பு
திருச்சி: ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர் என் ரவி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றனர்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், அங்கு போக்குவரத்து தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையத்தை அமைத்துள்ளது.

இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கட்டப்பட்டுள்ள திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்க உள்ளார்.
இந்த நிலையில், தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் வரவேற்றனர். தொடர்ந்து கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அப்போது சாலையில் ஓரமாக நின்ற பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு 38-வது விழாவில் கலந்துகொண்டார். அங்கு 1528 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்குகிறார். தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த பல்கலைக்கழக விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலினும், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியும் கலந்துகொண்டனர். மேலும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நண்பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கு புதிய முனையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழா முடிந்ததும் பிற்பகல் 1.05 மணிக்கு பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.
இதேபோல் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பாஜகவினர்களின் வாகனங்கள் காலை 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், இதெபோல் பாரதிதாசன் பல்ககலைக்கழகம் செல்லும் பாஜகவினரின் வாகனங்கள் கும்பக்குடி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதேபோல் திருச்சி விமான நிலையம் வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களின் வழியிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் காலை 7 மணியில் இருந்து திருச்சி பெருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications