ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழப்பு... மீளாத்துயரில் மூழ்கிய தமிழகம்
Recommended Video
திருச்சி: மணப்பாறை அருகே கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரிழந்து விட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இன்று அதிகாலை அறிவித்தார்.
நேற்றிரவு 10 மணி முதல் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கயதாகவும் அவர் கூறினார்.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக சுஜித்தை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

துர்நாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்பதற்காக 80 மணி நேரத்துக்கும் அதிகமாக மீட்புப்பணிகள் நடைபெற்றன. ஆனால் அந்தச் சிறுவனை உயிருடன் மீட்க முடியாத துரதிர்ஷட நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 10 மணி முதலே ஆழ்துளை கிணற்றுக்கு அருகே துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.

அதிகாலை 2.30 மணி
சிறுவன் உயிரிழந்ததை நள்ளிரவு உறுதிப்படுத்திய அரசு தரப்பு, அந்தத் தகவலை அதிகாலை 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வருவாய் நிர்வாக ஆணையர் செய்தியாளர்களை அழைத்து சிறுவன் சுஜித் உயிரிழந்த தகவலை தெரிவித்தார். மீட்பு குழுவினர் நடத்திய கடுமையான போராட்டங்கள் பலனளிக்கவில்லை என தெரிவித்தார்.

கட்டுப்பாடு
இந்நிலையில் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தை தனது கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்த போலீஸ், அசம்பாவித நிகழ்வு நடக்காத வண்ணம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், தகவல் அறிந்து சுற்றுப்பட்டு கிராமமக்கள் திரள்வார்கள் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிராமமே சோகம்
சிறுவன் சுஜித்தை எப்படியாவது மீட்டுவிடமாட்டார்களா, மீண்டு வந்துவிடவேண்டும் என எதிர்பார்த்து தமிழகமே காத்திருந்த நிலையில், அவர் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகிற்கு சென்றுவிட்டான். இதனால் நடுக்காட்டுபட்டி கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மீட்புப்படை
சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு நாட்களாக போராடிய மீட்புக்குழுவினர் துயரம் தாங்காமல் கண்ணீர் விட்டனர். அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவரும் முயற்சி பலனளிக்காததை எண்ணி துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications