அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை: மாஜி பாமக பிரமுகர்கள் 2 பேரிடம் திடீர் விசாரணை- திருச்சி 'பரபர'
திருச்சி: தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் பாமக பிரமுகர்கள் என கூறப்படும் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் திடீரென விசாரணை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த திமுக தலைவரும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். திருச்சி திமுகவின் நேருவின் 'நிழலாக' திமுகவின் 'செயல்' முகமாக இருந்து வந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற நிலையில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார் ராமஜெயம். பின்னர் ராமஜெயத்தின் உடல் கொடூரமாக தாக்கப்பட்டு முள்கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் காவிரி ஆற்று படுகையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

11 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை ஶ்ரீரங்கம் போலீசார் முதலில் நடத்தினர். பின்னர் சிபிசிஐடி, சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டது. ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்னமும் ராமஜெயம் கொலை வழக்கில் சிறு முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கின் கொலையாளிகள் யார் என்பதே தெரியாத மர்மமாக இருந்து வருகிறது.
12 ரவுடிகளிடம் விசாரணை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 ரவுடிகளை குறிவைத்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்டவை நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பின்னர் நடத்தப்பட்டது. இருந்த போதும் ராமஜெயம் கொலை வழக்கின் திசைவழி போக்கு தெரியாமல் பெரும் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
எஸ்பி இட மாற்றம்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த எஸ்பி ஜெயக்குமாரும் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் திருவாரூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாஜி பாமக பிரமுகர்களிடம் திடீர் விசாரணை: இந்த பின்னணியில் இன்று திடீரென மாஜி பாமக பிரமுகர்கள் எனக் கூறப்படும் பிரபு, உமாநாத் இருவரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரிக்கப்பட்டனர். இது தொடர்பாக திருச்சி போலீஸ் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ராமஜெயம் மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்பட்டார். ராமஜெயத்தை கடத்தி படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட காரை முன்னாள் பாமக பிரமுகர்களாக கூறப்படும் பிரபு, உமாநாத் ஆகியோரும் பயன்படுத்தியதாகவும் அதனாலேயே சந்தேக வளையத்துக்குள் கொண்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications