தலைவா.. இங்க வந்து நில்லுங்க தலைவா.. திருச்சியில் கமல் போட்டியிட விரும்பி மனு செய்த வக்கீல்!
கமல்ஹாசனுக்காக திருச்சி தொகுதியில் விருப்ப மனுவை வக்கீல் ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என, அந்த தொகுதியை சேர்ந்த, வக்கீல் கிஷோர் குமார் என்பவர் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
தனித்து போட்டி, அல்லது நல்லவர்கள் இணைந்தால் 3-வது அணி என்று கமல் சொல்லிவிட்டார். ஆனால் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு வலுவான கூட்டணி எதுவும் அமையவில்லை.
இப்போதைக்கு ஆம் ஆத்மி மட்டுமே கூட்டணி வைக்கும்போல தெரிகிறது. அதே நேரத்தில் வெற்றி பெறா முடியாவிட்டாலும், முதல் தேர்தல் என்பதாலும் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதாலும் மய்யத்தின் முழு பலத்தை அறிய கமல் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார்.

எதிர்பார்ப்பு
இதனால் விருப்ப மனு தாக்கலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மய்யத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கூட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் கமல் சொல்லவும் இதில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் குழு
பிப்ரவரி 23ம் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. இன்றும், நாளையும் அது பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களாக பெறப்பட உள்ளன. தேர்தல் குழுவின் ஆலோசனைக்கு பின், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

விருப்ப மனு
இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த, வக்கீல் கிஷோர் குமார் என்பவர், 'திருச்சி லோக்சபா தொகுதியில், கமல் போட்டியிட வேண்டும்' என விருப்ப மனு கொடுத்துள்ளார். இதனால், கமல், இந்த தொகுதியில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

என்னதான் செய்வார்?
ஏற்கனவே சொந்த மாவட்டம் என்பதால் ராமநாதபுரத்தில் கமலை போட்டியிட சொல்லி அங்கிருப்பவர்கள் உரிமையுடன் வலியுறுத்தி வருகிறார்கள். இப்போது திருச்சியிலும் கமலை போட்டியிட வேண்டும் என்று வாஞ்சையுடன் கேட்க துவங்கி விட்டார்கள். எல்லாருமே இப்படி அவரவர் தொகுதிக்கு கமலை கேட்டால், அவர் என்னதான் செய்வார்? எங்குதான் போட்டியிடுவார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications