திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடக்குமோ? 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் ஒரு சிக்கல் இருக்கு.. விளக்கும் அதிகாரிகள்!

சிறுவன் சுஜித்தை மீட்க 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இருக்கிறது என்று அங்கு பணிபுரிந்து வரும் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் ஒரு சிக்கல் இருக்கு.. விளக்கும் அதிகாரிகள்

    திருச்சி: சிறுவன் சுஜித்தை மீட்க 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இருக்கிறது என்று அங்கு பணிபுரிந்து வரும் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது நாட்டையே உலுக்கி உள்ளது . கடந்த 65 மணி நேரமாக சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஆனால் சிறுவன் தற்போது 100 அடியில் இருப்பதால், அவனை மீட்பது மிகவும் கடினமான செயலாக மாறியுள்ளது. 40க்கும் மேற்பட்ட மீட்பு படை குழுவினர் அங்கு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலிலேயே இதைச் செய்திருக்கலாமே.. சுஜித் மீட்புப் பணியில் களமிறங்கிய போர்வெல் மெஷின்!முதலிலேயே இதைச் செய்திருக்கலாமே.. சுஜித் மீட்புப் பணியில் களமிறங்கிய போர்வெல் மெஷின்!

    ரிக் மிஷின் செல்லவில்லை

    ரிக் மிஷின் செல்லவில்லை

    நேற்று காலையில் இருந்து மூன்று வகையான ரிக் மிஷின் கொண்டு சுஜித் இருக்கும் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. முதலில் 25 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின் பாறைகள் இருந்ததால் குழி தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    மீண்டும் தோண்டினார்கள்

    மீண்டும் தோண்டினார்கள்

    அதன்பின் மூன்று எந்திரங்களை பயன்படுத்தி 45 அடி வரை பள்ளம் தோண்டிவிட்டார்கள். இந்த நிலையில் தற்போது போர்வெல் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. பாறைகள் இருக்கும் பகுதியை கடந்த பின் மீண்டும் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படும்.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    சிறுவன் சுஜித்தை மீட்க 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இருக்கிறது என்று அங்கு பணிபுரிந்து வரும் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தற்போது சுஜித் இருக்கும் குழிக்கு 10 மீட்டர் தள்ளிதான் இந்த பள்ளம் தோண்டப்படுகிறது. அதனால் அடியில் கிடைமட்டமாக சுரங்கம் அமைக்க வேண்டும்.

    சுரங்கம்

    சுரங்கம்

    அதாவது சுஜித் இருக்கும் பகுதியுடன் இணைக்கும் வகையில் அடியில் கையால் சுரங்கம் தோண்ட வேண்டும். இதை செய்ய 1 மணி நேரம் ஆகலாம். அருகில் உள்ள குழியில் சிறுவன் இருப்பதால் கையால் மட்டுமே இந்த கிடைமட்ட சுரங்கத்தை தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    ஆனால் நடக்குமா

    ஆனால் நடக்குமா

    ஆனால் அடிப்பகுதியில் பாறைகள் இருந்தால், கிடைமட்டமாக சுரங்கம் தோண்டுவது, அதுவும் கையால் தோண்டுவது மிகவும் சிரமம் ஆகும். ரிக் மிஷினே திணறும் போது கையால் இந்த பணியை செய்வது மிகவும் கடினம் ஆகும். இதை தீயணைப்பு வீரர்கள் எப்படி செய்ய போகிறார்கள் என்ற கடும் குழப்பம் நிலவி வருகிறது.

    மாற்றி செய்வார்கள்

    மாற்றி செய்வார்கள்

    இதை செய்ய 1 மணி நேரம் ஆகலாம். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் 30 நிமிடம் வரும். அதனால் இரண்டு வீரர்கள் மாற்றி மாற்றி உள்ளே வெளியே சென்று சுரங்கத்தை தோண்டுவார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Save Sujith: Horizontal drilling going to be a difficult job in the rescue operation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X