பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு
திருச்சி: பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் பரவியதால் திருச்சியில் 2-வது நாளாக போலீசார் சோதனை நடத்தினர். ஸ்ரீரங்கம் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியதாக தகவல் பரவியதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாநகரில் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனை செய்து அனுப்பினர். மாநகரில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தங்களது கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர்.
இதேபோல் வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னர் போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியில் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பிற கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர். திருச்சி விமானநிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர்.
விமானநிலையத்திற்கு வரும் மற்றும் விமானங்களில் வந்திறங்கும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே, அவர்களை செல்ல அனுமதிக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications