Seeman: ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை தேவையா.. நாங்க கேட்டோமா.. யாரு காசு இது - கொந்தளித்த சீமான்
திருச்சி: தமிழக அரசு சார்பில் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ. 5 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ. 5 ஆயிரம் நாங்கள் கேட்டோமா என்றும், இவ்வளவு நிதிப் பற்றாக்குறையை வைத்துக்கொண்டு இலவசம் கொடுப்பதா என்றும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார் [Seeman on Mahalir urimai thogai].
பிப். 21 இல் நாதக மாநாடு
திருச்சியில் பிப்ரவரி 21 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மக்கள் அரசியலில் மாற்றத்தை விரும்புகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். தேர்தல் பிரசாரத்தை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது. வேட்பாளரை 234 தொகுதிகளுக்கும் மொத்தமாக அறிவித்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை முழுவீச்சில் தொடங்கவுள்ளோம் என்றார்.
ஆட்சிமுறை மாற்றம்
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் குறித்த கேள்விக்கு, 10.25 லட்சம் கோடி பற்றாக்குறையில் இருக்கிறது. இந்த ஆட்சி முறை அரசியலை எதிர்க்கிறோம். ஆள்மாற்றம், ஆட்சி மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவது ஆட்சி முறை மாற்றத்தைத் தான். இந்த நாடு கட்டமைக்கிற வளர்ச்சி என்பது கடன் வளர்ச்சி. 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அதில் தான் நாம் முதன்மையாக வளர்ந்து கொண்டு போகிறோம். வேறென்ன இருக்கிறது.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாமே கடன் வாங்கி நிறைவேற்றப்பட்டவை. கடன் பெற்று தான் திட்டத்தை அரசு நிறைவேற்றுகிறது. ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி வீதியில் நின்று போராடுகின்றனர். படிக்கின்ற ஆசிரியர்கள் போராடும் அளவுக்கு நம் நாடு இருக்கிறது. எல்லாம் இலவசமாக கொடுக்கிறார்கள். அறிவை வளர்க்கும் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வீதியில் நின்று போராடுகிறார்கள். ஆனால், பொங்கலுக்கு அரிசி, வேட்டி சேலை இலவசமாக வழங்குகின்றனர்.
அறிவு, மருத்துவம் அடிப்படை
பொங்கலுக்கு நீங்கள் குவாட்டர் இலவசம் என்று கடையில் விற்பனை செய்ய முடியுமா. இலவசமாக எதைக் கொடுக்க வேண்டும் என்றுள்ளது அல்லவா. அடிப்படையானது அறிவு, உயிர்காக்கும் மருத்துவம். இவை இரண்டையும் உலகத்தரத்திற்கு கொடுக்க முடியுமா. இலவசமாக கொடுக்கப்படுகிறது என்று சொல்லக் கூடாது. தரமாக, சரியாக இருக்கிறதா என்பது தான் கேள்வி.
தரமாக இருந்தால் முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம் காவேரி, அப்பல்லோ, எம்ஜி ராமச்சந்திராவில் சென்று மருத்துவம் பெறுகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாமே. ஏனென்றால் தரமில்லை. அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை எம்எல்ஏக்களில் யாருடைய பிள்ளை அரசு கல்லூரிகளில் படிக்கிறது? ஏன் படிக்கவில்லை என்றால் தரமில்லை. அதைக் கொடுக்க வேண்டும்.
5 ஆயிரம் கேட்டோமா
ஆயிரம் ரூபாய் கொடுங்கள், தேர்தல் வரும் போது திடீரென 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். கோடை நேரம் வரும் கை செலவுக்கு காசு இருக்காது, 2 ஆயிரம் ரூபாய் போட்டு கொடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. எதை வைத்து கடனைப் பெற்றிருப்பீர்கள். மனித வளத்தையும், மண்ணின் வளத்தையும் காட்டித் தானே பெற்றிருப்பீர்கள். இந்தக் கடனை எதை வைத்து கட்டுவீர்கள்.
எங்கள் உழைப்பைச் சுரண்டி வரியை எடுத்து கடனை கட்டுவீர்கள். யாரை வைத்து கடன் பெறுகிறீர்கள் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு 5 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் பேரிலும் 2 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அடுத்த தேர்தலுக்கு, அதற்கடுத்த தேர்தலுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்.
இலவசம் கொடுப்பதா
இந்தியா 196 லட்சம் கோடியை கடனாக வாங்கியுள்ளது. இந்தக் கடனை எப்போது கட்டுவது. இவ்வளவு கடனை நம் நாடு வாங்கினால் பொருளாதார அடிமையாகி விடாதா நம் நாடு. தவிர்க்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி, வீழ்ச்சி வந்தால் என்ன செய்வது. இவ்வளவு நிதி நிலை பற்றாக்குறையை வைத்து கொண்டு இலவசம் கொடுக்கப்பட வேண்டுமா என்று கூறினார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications