ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையே புருவம் உயரச் செய்த செல்ஃபி.. திருச்சி ஏர்போர்ட்டில் ருசிகரம்
திருச்சி: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது. களத்தில் அனல் பறக்கும் சூழலில் கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி கடுமையான கருத்து யுத்தங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி திருச்சி சிவா எடுத்த செல்ஃபி ஒன்று சமூக வலைதள வாசிகளை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சிலபல வாரங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ள சூழல் நிலவுகிறது.

கடந்த சில நாட்களாகவே அரசியல் களத்தில் கருத்து யுத்தங்கள் கடுமையாக நடக்கின்றன. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சி கூட்டணியும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு கட்சி தலைவர்களுடன் திமுக எம்.பி. திருச்சி சிவா செல்பி எடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் சந்தித்த நிலையில் அனைவரும் சேர்ந்து செல்பி போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "சற்று முன் திருச்சி விமான நிலையத்தில்.. 'முறுவலிக்கும் முரண்கள்'. அண்ணன் திருச்சி சிவா எடுத்த செல்பி" என்று தெரிவித்து பகிர்ந்துள்ளார். திருச்சி சிவா எடுத்த இந்த செல்பி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தல் திருவிழா களைகட்டும் நேரத்தில், எதிரும் புதிருமாக வார்த்தைப் போர் புரியும் அரசியல்வாதிகள், சிரித்த முகத்தோடு, அருகருகே நின்று செல்பி எடுத்துக்கொண்டுள்ள இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications