என்ன பண்ணாலும் இந்த உலகம் நம்மள உத்து பாக்கனும்! திருமண வரவேற்பில் ’சேவை’! அசத்திய மணமகளின் தந்தை!
திருச்சி: திருச்சி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சேவை மையம் நடைபெற்றது. இந்த விநோத சம்பவம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பொதுவாக திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மணமக்களுக்கு கிப்ட் பாக்ஸ் அல்லது மொய்ப் பணம் வழங்குது வழக்கம். இதற்கு பதிலாக, திருமண நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்களுக்கு, மணமக்கள் சார்பில், திருமண தாம்பூலப் பைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்துவருகிறது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, திருச்சியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சேவை மையம் நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி
திருச்சி கருமண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சத்யநாதன் உடையார் - ஜெனட்ரம்யா தம்பதியரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்கள் ரோஷிணிராய் - ஜெரோம்ஜோஸ்வா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, வித்தியாசமான முறையில் நடத்த மணமகளின் தந்தை சத்யநாதன் முடிவு செய்தார்.

விழிப்புணர்வு வாசகம்
அதன்படி, 'வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்! இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்' என்ற வாசகத்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை மையத்திற்கும் ஏற்பாடு செய்து அசத்தினார். இந்த மையத்தை, மணமக்கள் திறந்து வைத்து, அனைவரையும் வியப்படைய செய்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், இந்த மையத்தில் இலவசமாக ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக் கொண்டனர்.

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு
இதுகுறித்து பேசிய மணமகளின் தந்தை சத்யநாதன், பொதுமக்களுக்கு ஏதாவது விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தாகவும், நீர்நிலை பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, கொரோனா விழிப்புணர்வு போன்றவை ஏற்கெனவே மக்களிடம் சென்றடைந்ததாக தெரிவித்தார். இதனால் தற்போது, மக்களுக்கு தேவைப்படும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது குறித்து விழிப்பணர்வு மக்களிடம் சரியாக சென்றடையாததால், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பியதாக கூறினார்.

மணமகளின் தந்தை மகிழ்ச்சி
இதற்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சேவை மையம் நடத்தப்படும் என, திருமண வரவேற்பு அழைப்பிதழிலில் அச்சிட்டு வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், இந்த மையத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைத்துக்கொண்டனர். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மணமகளின் தந்தை சத்யநாதன் பெருமிதம் தெரிவித்தார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications