ஆங்கிள் ஆங்கிளாக.. ஆபாசமாக வீடியோ எடுத்த காதலன்.. காதலியை மிரட்டிய கும்பல்.. 4 பேரும் ஜெயிலில்!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஆங்கிள் ஆங்கிளாக.. ஆபாசமாக.. ரம்யாவை படம் பிடித்தார் காதலன்.. இந்த வீடியோவை கட்செவி மூலம் தன் நண்பர்கள் 3 பேருக்கும் அனுப்பி வைக்க.. ரம்யாவை விரட்டி வந்து பாலியல் தொல்லை தந்துள்ளனர் அந்த காமுகர்கள்.. இப்போது 4 பேருமே ஜெயிலில் உள்ளனர்!

திருச்சி சிந்தாமணியை சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. தனியாா் கல்லூரியில் பிஏ 2-வது வருஷம் படித்து வருகிறார்.. இவர் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் என்பவரை காதலித்தார்.

sexual torture to college girl and four arrested in trichy

ஆனால், அலெக்ஸின் சுயரூபம் சில நாட்களிலேயே தெரியவந்ததும், மனம் உடைந்த ரம்யா அந்த காதலை முறித்து கொண்டார்.. இதற்கு பிறகு விசுவநாதன் என்பவரை ரம்யா காதலித்தார். இந்த விஸ்வநாதன், அலெக்ஸ்ராஜின் நண்பனும்கூட.

உயிருக்கு உயிரானவன் என்பதாலும், கல்யாணம் செய்து கொள்பவன் என்பதாலும் விஸ்வநாதனிடம் கொஞ்சம் நெருங்கியே பழகினார் ரம்யா.. இந்த சமயத்தில்தான், பல்வேறு கோணங்களில் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் விஸ்வநாதன்... அந்த வீடியோக்களை தனது நண்பர்கள் அலெக்ஸ்ராஜ், பிரான்சிஸ், அருண் போன்றோருக்கு கட்செவி மூலம் அனுப்பி வைத்தார்.

அந்த வீடியோவை பார்த்த நண்பர்கள், ரம்யாவிடம் தகாத வார்த்தைகளிலும் ஆபாசமாகவும் பேச ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, கோட்டை அனைத்து மகளிா் போலீசில் புகாா் தந்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸாா், விசுவநாதன் உள்பட 4 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+