என் தாயெனும் கோவிலை.. வீல் சேரில் தாயின் உடலை வைத்து தள்ளிச் சென்ற மகன்! உருக வைக்கும் பின்னணி!
திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை, சக்கர நாற்காலியில் வைத்து 4 கி.மீ தொலைவில் உள்ள மயானம் வரை கொண்டு சென்ற மகன் குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. 74 வயதாகும் ராஜேஸ்வரி என்னும் மூதாட்டி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தோல் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்து வந்த மூதாட்டி கடந்த வியாழனன்று காலை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

தாய் மரணம்
அதனைத்தொடர்ந்து தோல் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் என கருதிய மகன் தனது இல்லத்தில் இருந்து சக்கர நாற்காலியில் உயிரிழந்த தாயை அமர வைத்து செவலூர் பகுதியில் இருக்கும் மயானம் வரை 4 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற சம்பவம் மணப்பாறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சக்கர நாற்காலியில் உடல்
60 வயதான முருகானந்தம் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றியவர். இந்த நிலையில் தான் தனது தாய் உயிரிழந்த நிலையில் அவரது உடலை சக்கர நாற்காலியில் வைத்து ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு சென்றிருக்கிறார். மேலும் இடுகாடுக்குச் சென்ற பின் முறையாக இறுதிச் சடங்கு நடத்துவதற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என சுடுகாட்டில் இருக்கும் ஊழியர்களிடம் தெரிவித்தார்.

சுடுகாட்டில் தகனம்
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த பின் உதவுவதாக கூறியுள்ளனர். மேலும் பலத்தால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதற்காக உதவ முன் வந்தன. தொடர்ந்து அவரது உடல் மாநகராட்சி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனை ஆவணங்களை சரிபார்த்து இறப்புச் சான்றிதழ் முருகானந்தத்துக்கு வழங்க மாநகராட்சி அதிகாரிகளே உதவினர்.

வேதனை
இதனிடையே முருகானந்தம் தனது தாயின் உடலை துணியால் சுற்றி சர்க்கரை நாற்காலியில் வைத்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாரேனும் குற்றச்சன்பவங்களில் ஈடுபட்டு உடலைக் கொண்டு செல்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்து நிலையில் தற்போது முருகானந்தத்தின் நிலை குறித்து அறிந்து பலரும் தங்கள் ஆறுதலையும் வேதனையையும் பகிர்ந்து வருகின்றனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications