திருச்சி - அகமதாபாத் இடையே சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்ட டைம் ஷெட்யூல்
திருச்சி: திருச்சி - அகமதாபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பயனிகளின் நலனுக்காகவும் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அகமதாபாத் - திருச்சி, மதுரை - ஓகா இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. அந்த சிறப்பு ரயில்கள் தற்போது நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அகமதாபாத்திலிருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.09419) புறப்பட்டதிலிருந்து 3-வது நாள் காலை 3.45 மணிக்கு திருச்சி வந்தடையும். மறுமார்க்கமாக, திருச்சியிலிருந்து வரும் 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.40 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (09420) புறப்பட்டதிலிருந்து 2-வது நாள் இரவு 9.15 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.
இதேபோல, குஜராத் மாநிலம் ஓகாவிலிருந்து வரும் 11,18, 25 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (09520) புறப்பட்டதிலிருந்து 4-வது நாள் காலை 11.45 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக, மதுரையிலிருந்து வரும் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு ஓகா செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (09519) புறப்பட்டதிலிருந்து 3-வது நாள் காலை 10.20 மணிக்கு ஓகா சென்றடையும்.
வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக ஏராளமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் டிக்கெட்டின் விலையும் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் இதை நம்பியே இருக்கிறார்கள். விரைவு ரயில் என்றில்லை மின்சார ரயில்கள் கூட இன்று நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. பெரும்பாலான வளர்ந்த நகரங்களில் மின்சார ரயில் செல்லாத இடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அது போல் அதிவிரைவு ரயில் என சொல்லப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் அலுப்பு தெரியாமல் விரைந்து செல்லும் இடத்தை அடையலாம். கட்டணம் அதிகம் என்றாலும் மக்கள் இந்த ரயில்களை விரும்புகிறார்கள்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications