ஜாகீர் உசேன் வெளியேற்றம்.. '21 முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை..' கோயில் இணை ஆணையர் புகார்
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ரங்கராஜன் என்பவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் இணை ஆணையர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர்களில் ஒருவரான ஜாகீர் உசேன், நடனத்திற்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கூட பல ஆண்டுகளாகப் பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சிறு வயதில் இருந்தே வைணவத்தை ஏற்றுள்ள இவர், இந்து கோயில்களுக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாகத் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை ஆய்வு செய்து, ஸ்ரீரங்க நாயக்கம் என்ற நாட்டியத்தையும் அவர் அரங்கேறியுள்ளார்.

கோயிலில் இருந்து வெளியேற்றம்
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஜாகீர் உசேன் சென்ற போது, அங்கிருந்து அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கராஜன் என்ற நபர், மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாகீர் உசேனை மிரட்டி வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும், பெருமாளை வணங்கச் சென்ற தன்னை ரங்கராஜன் என்ற நபர் கழுத்தைப் பிடித்து நெட்டி தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜாகீர் உசேன் குற்றஞ்சாட்டினார்.

ஜாகீர் உசேன் வருத்தம்
இது தொடர்பாக ஜாகீர் உசேன் தனது பேஸ்புக் பக்கத்தில், "நான் என் தாய்வீடாகக் கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன்.

துணை நிற்பார்
இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. என்னைத் துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல. இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன். காலம் , திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை" என்று பதிவிட்டிருந்தார்.

பொதுமக்கள் வலியுறுத்தல்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகச் சிறந்த பரத நாட்டிய கலைஞரான ஜாகீர் உசேனை மதத்தின் பெயரால் அவமதித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் திடீரென ஜாகீர் உசேனுக்கு ரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படவே, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டிருந்தார்.

கோயில் இணை ஆணையர் புகார்
இந்தச் சூழலில் நாட்டிய ஜாகீர் உசேனை கோயிலை விட்டு வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து திருச்சி மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில், "கோயில் வழக்கப்படி, மாற்று மதத்தினராக இருந்தாலும் சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு கோயிலுக்கு வருவோர் தரிசிக்கலாம். ஜாகீர் உசேன் வைணவத்தின் மீது நம்பிக்கை கொண்டு பல முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அவரை வெளியேற்றியுள்ளார்

21 முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
ஜாகீர் உசேனை ரங்கராஜன் என்பவர் தீய உள்நோக்கம் மற்றும் விரட்டியடிக்கும் எண்ணத்துடன் குற்றச் செயல் புரிந்தது கோயில் பணியாளர்களிடம் விசாரித்ததில் தெரிய வந்ததது. ரங்கராஜன் நரசிம்மன் இதற்கு முன்னரும் பல முறை கோயில் நிர்வாகத்துக்கு எதிராக வேண்டுமென்றே குழப்பம் விளைவித்து, அரசுக்கு எதிராகக் கலகம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாகக் கடந்த 2016 ஆகஸ்ட் முதல் ஜூலை வரை 21 முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications