• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கொரோனாவை உடைக்க இந்த கடுமையான விதிதான் ஒரே வழி.. மக்களே உஷாராக இருங்கள்!

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா என்ற கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) பாதுகாப்பான சமூக இடைவெளிக்கான விதிமுறைகளை வெளியிட்டது. இந்திய அரசும் அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்பான சமூக இடைவெளியை பராமரிக்க கடுமையான உத்தரவுகளை பிறப்பித்ததுடன், மக்கள் நடமாட்டத்தை நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது.

  தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் என்ன.. தமிழக அரசு அரசாணை வெளியீடு

  பொது இடங்களில் மற்றவர்களுடன் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தையாவது பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. யாரோ இருமல் தும்மும்போது அல்லது பேசும்போது அவர்கள் மூக்கு அல்லது வாயிலிருந்து நீர்த்துளிகள் வெளியாகும், அதில் வைரஸ் இருக்கலாம். எனவே சந்தைகள் மற்றும் பிற பொது இடங்களில் சமூக தொலைவு அல்லது பாதுகாப்பான தூர விதிமுறைகளை நாம் பராமரிக்காவிட்டால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது.

  சோப்பு நீர் மற்றும் ஆல்கஹாலை கொண்ட சானிட்டைசர்களை கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது, ஏனெனில் இது நம் கைகளில் ஒட்டக்கூடிய வைரஸ்களைக் கொல்லக்கூடும். வைரஸ் பரவுவதைத் தடுக்க கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றைத் தொடுவதைத் தவிர்க்கவும் என்றும் உலக சுகாதாரண அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட தூய்மை மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றுவது கொரோனா பரவுவதை தடுக்க ஒரே தீர்வாகும். மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய ஊரடங்கை அறிவித்தது சிறந்த முடிவுகளை அளித்து.

  39 000 ஆக உள்ளது

  39 000 ஆக உள்ளது

  ஊரடங்கு இல்லாவிட்டால் இந்தியாவில் கோவிட் -19 நோயாளிகள் எண்ணிக்கை ஏப்ரல் மத்தியில் 8.2 லட்சமாக உயர்த்தியிருப்பார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது. சமூக தொலைவு மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் குறித்த அரசாங்கங்களின் பரவலான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் காரணமாகவே, மே 3 ஆம் தேதி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40,000 ஆக உள்ளது.

  முககவசம் அவசியம்

  முககவசம் அவசியம்

  பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறைகள் நிச்சயமாக நோய் பரவுவதைத் தடுக்கும் என்று திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒவ்வாமை நிபுணர் டாக்டர் கமல் கூறுகிறார். விதிமுறைகளின்படி மக்கள் வெளியே வரும் போது எப்போதும் முககவசம் அணிய வேண்டும் என்றார். இது எந்தவொரு தொற்றுநோயையும் தவிர்க்கும், மேலும் பரவலை தடுக்கும்.

  காய்கறி சந்தைகள் மூடல்

  காய்கறி சந்தைகள் மூடல்

  திருச்சிராப்பள்ளியில், பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்துகிறது. மாவட்ட கலெக்டர் சிவராசு விதிமீறல்களை தடுக்க தீவிர சோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிக சந்தைகள் மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் இறைச்சி சந்தைகள் மூடப்பட்டுள்ளது.

  தன்னார்வலர்கள்

  தன்னார்வலர்கள்

  ரேஷன் கடைகளில் மே 4 முதல் அத்தியாவசிய பொருட்களை வழங்க முதலமைச்சரின் உத்தரவுப்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று திருச்சி ஆண்டால் தெரு ரேஷன கடை விற்பனையாளர் ஆர்.சீனிவாசன் கூறினார். பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் ஒரு நபருக்கு ஒரு கிலோ பருப்பு வகைகள் வழங்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வீடுகளில் நேரடியாக விநியோகிக்கப்படும் டோக்கன்களின்படி நாள் ஒன்றுக்கு 200 ரேஷன் கார்டுதார்களுக்கு மட்டுமே ரேஷன் வழங்கப்படும்.

  சதுர பெட்டிகள்

  சதுர பெட்டிகள்

  ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒரு மீட்டரின் சமூக பாதுகாப்பான தூர விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மக்கள் வரிசையில் நின்று பாதுகாப்பான தூர விதிமுறைகளைப் பின்பற்றுவதற்காக ரேஷன் கடைக்கு அருகில் சதுர பெட்டிகள் வரையப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி மேற்குத் தொகுதியில், ரேஷன் கடைகளில் பாதுகாப்பான தூர விதிமுறைகளை அமல்படுத்த கலெக்டரின் உத்தரவின்படி 92 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரேஷன் கடைக்கு இரண்டு தன்னார்வலர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதில் ஈடுபடுவார்கள் மற்றும் சமூக தூரத்தை உறுதி செய்வார்கள்.

  இன்று முதல் டோக்கன்

  இன்று முதல் டோக்கன்

  கரூரில், கலெக்டர் அன்பழகன் 586 தன்னார்வலர்களை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாதுகாப்பாக கண்காணிக்க நியமித்துள்ளார். இன்றுமுதல் மே மாத ரேஷன் பொருட்களை வழங்க டோக்கன்கள் வழங்கப்படுகின்றன என்று கருர் குலிதலை பெரியார் நகர் ரேஷன் கடையின் விற்பனையாளர் மஹேஸ்வரி தெரிவித்தார். ரேஷன் கடைகளில் பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தன்னார்வலர் குமார் தெரிவித்தார்.

  தவறாக பயன்படுத்தக்கூடாது

  தவறாக பயன்படுத்தக்கூடாது

  மக்களின் உணவு மற்றும் பிற அத்தியாவசியங்களை கவனித்துக்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. தளர்வு தவறாகப் பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடுமையான பொறுப்பாகும். சமூக தூரத்தை கண்டிப்பாக பின்பற்றுவது தனிப்பட்ட பாதுகாப்பை மட்டுமல்ல, குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருந்தால் நாடு விரைவில் பாதுகாப்பாக மாறும், இதன் மூலம் கொரோனா என்ற கோவிட் -19னின் பரவல் சங்கிலியை நிரந்தரமாக உடைக்கலாம். அனைவரையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பாதுகாப்பாக இருப்போம்.

  English summary
  strict social distancing - by the people , for the people and of the people. the only way to break the covid-19 transmission chain
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X