Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டு தந்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிக்களுக்கு பறக்கும் போன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lalitha Jewellery theif Murugan affair with Tamil actress

    திருச்சி: "நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்" என்று சுரேஷ் சொன்ன வாக்குமூலம் திரையுலகையே புரட்டி போட்டு வருகிறது.. சம்பந்தப்பட்ட தெலுங்கு, தமிழ் நடிகைகளுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கிறது... அதனால் நெருக்கமான விவிஐபிக்களுக்கு போனை போட்டு "எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்" என்று கேட்டு நச்சரிக்க தொடங்கி உள்ளார்களாம்!

    லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முக்கிய குற்றவாளிகள் முருகன், சுரேஷ், கணேசனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இதில் எப்படி கொள்ளைகளை அடித்தோம் என்று விலாவாரியாக கணேசன் சொல்லி கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் மாமா முருகனின் எல்லா ரகசியங்களையும் புட்டு புட்டு வைத்து வருகிறார் சுரேஷ்! அதில் ஒரு விஷயம்தான், நடிகைகளுடனான தொடர்பு என்பது!

    நகை கடை

    நகை கடை

    "கொள்ளை அடித்த பணத்தை கொண்டு சினிமா எடுத்தோம். ஒரு படத்துக்கு ஹீரோயினாக புக் செய்ய ஒரு பிரபல தமிழ் நடிகையை சந்தித்தோம்.. டேட் இல்லை என்று சொல்லிவிட்டார்.. நாங்கள் நகை கடை வைத்திருக்கிறோம் என்றோம்.. உடனே நெருங்கி பேச ஆரம்பித்துவிட்டார். கொள்ளையடித்த ஒரு நகையை அவருக்கு தந்தோம்.. விஜய், சிவகார்த்திகேயனுடன் நடித்த அவர் ஒரு வாரிசு நடிகை.. அதேபோல, தமிழ், தெலுங்கு நடிகைகளிடம் உல்லாசமாக இருந்தோம்.. பணம், நகைகளை அவர்களிடம் நாங்கள் கொட்டினோம்" என்று வாக்குமூலமாக சொல்லி உள்ளான்.

    தெலுங்கு நடிகைகள்

    தெலுங்கு நடிகைகள்

    இந்த விஷயம்தான் தெலுங்கு, தமிழ் சினிமா உலகில் றெக்கை கட்டி பறக்கிறது. இதெல்லாம் உண்மையா, பொய்யா என்பதை அறிய, வாரிசு நடிகையிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைதவிர, எந்தெந்த நடிகைகளுடன் இவர்கள் ஜாலியாக இருந்தனர் என்ற லிஸ்ட்டும் எடுத்து வருகிறார்கள்.

    உல்லாசம்

    உல்லாசம்

    இதெல்லாம் ஒரு பக்கம் போக, சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு டென்ஷன் தாங்கவில்லையாம். அதனால் முருகன், சுரேஷூடன் உல்லாசமாக இருந்த நடிகைகள், ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள், விவிஐபிக்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்களாம்..

    புலம்பல்

    புலம்பல்

    "நகை கடை வெச்சிருக்கிறதா சொன்னாங்க.. நகைகளை கிஃப்ட் பண்றதா சொன்னாங்க.. பரிசா தந்ததாலே தான் அந்த நகைகளை வாங்கி கொண்டோம்.. மற்றபடி எந்த தொடர்பும் இல்லை.. நாங்க இப்பதான் படங்களில் நிறைய கமிட் ஆரம்பிச்சிருக்கோம்.. பிரச்சனை பெரிசானால் எங்க மானம், மரியாதையே போய்விடும்.. மார்க்கெட் மொத்தமா போய்விடும்.. நீங்கதான் இதுக்கு உதவி செய்யணும்" என்று சில விவிஐபிக்களிடம் போன் போட்டு புலம்பி வருகிறார்களாம்.

    நழுவும் விவிஐபிக்கள்

    நழுவும் விவிஐபிக்கள்

    ஆனால், இந்த கொள்ளையர்கள் தமிழ்நாடு என்று மட்டும் இல்லாமல், தேசிய கொள்ளையர்கள் ஆவர். இந்த நடிகைகளை காப்பாற்ற போய், நமக்கு ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ என்று விவிஐபிக்கள் தரப்பு உதவி செய்ய தயங்குகிறதாம். அதுவும் இல்லாமல் இந்த பஞ்சாப் நேஷனல், லலிதா ஜூவல்லரி கொள்ளைகள் வெளியே தெரிந்து விவகாரம் பெரிதாகி விட்டதால்,நடிகைகளின் கெஞ்சல்களுக்கு நழுவி கொண்டு போகிறார்களாம் ஆளும் தரப்பும், விவிஐபிக்கள் தரப்பும்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+