நானும் மாமாவும் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்.. ஹீரோயினுக்கு நகை கொடுத்தார்.. சுரேஷ் பரபர தகவல்
Recommended Video
திருச்சி: "தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் நானும், மாமாவும் ஜாலியா இருந்திருக்கிறோம்.. ஒரு தமிழ் ஹீரோயினுக்கு என் மாமா ஒரு நகையை தந்தார்... அவங்களும் அதை வாங்கிக்கிட்டாங்க" என்று போலீசில் கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலம் தந்துள்ளான்.
லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகளை முருகன் & கோ கொள்ளையடித்தது.

இதில், மொத்தம் 6 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை வாடிப்பட்டி போலீசார் திருச்சி வந்து சுரேஷிடம் விசாரித்தனர். நேற்று 3-ம் நாள் விசாரணையில் பல விஷயங்களை போலீசாரிடம் சுரேஷ் சொன்னதாக தெரிகிறது.
அப்போது தன்னுடைய மாமா முருகன் எப்படியெல்லாம் கொள்ளை அடித்தார் என்பதை போலீசாரிடம் தெரிவித்தான். நேற்று முன்தினமே ஒரு தமிழ் இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு உள்ளது என்று ஒரு செய்தி கசிந்தது. ஏற்கனவே எய்ட்ஸ் வந்த முருகன், எந்த நடிகையுடன் தொடர்பில் இருந்திருப்பார் என்ற ஆச்சரியம் நிறைந்த கேள்வி எழுந்தது. இப்போது, திரும்பவும் நடிகை சமாச்சாரத்தை பற்றி சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
அதில், "ஏற்கனவே 2 தெலுங்கு படங்கள் எடுத்து கையை சுட்டுக் கொண்டோம். ஷுட்டிங் முடிந்தும் படம் ரிலீஸ் ஆகாத ஆத்திரத்தில் இருந்தோம். இதனால்தான் பண நெருக்கடியை சரிக்கட்ட பஞ்சாப் நேஷனல் பேங்கில் கொள்ளையடித்தோம். அந்த பணத்தை வைம்தது திரும்பவும் சினிமா எடுக்க பிளான் பண்ணினோம்.
அதற்காக இப்போதுள்ள பிரபலமான தமிழ் நடிகையை நானும் என் மாமா முருகனும் நேரில் போய் சந்தித்தோம். அந்த நடிகை முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். விஜய், சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் இந்த நடிகை நடித்துள்ளார். அவர் ஒரு வாரிசு நடிகை.
நாங்கள் எடுக்க போகும் படத்தில் நீங்கதான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு நடிகை, இப்போ தான் பிசியாக இருப்பதாகவும், கால்ஷீட் உடனே கிடைக்காதே என்றும் சொன்னார். அப்போது நாங்கள், சொந்தமாக ஒரு நகைக்கடையை வைத்திருக்கிறோம் என்று சொல்லி, ஒரு நகையை அந்த நடிகைக்கு பரிசளித்தோம்.
அது ஏற்கனவே பேங்கில் கொள்ளையடித்த நகைதான். உடனே நடிகையும் அந்த நகையை வாங்கி கொண்டார். ஆனால், நானும் என் மாமாவும், கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளோம்" என்றார்.
சுரேஷ் இப்படி ஒரு வாக்குமூலத்தை சொன்னதுமே, முருகன், சுரேஷூடன் தொடர்பில் இருந்த நடிகைகள் யார் யார் என்பதை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முருகன் கொடுத்த நகைகளை பரிசாக பெற்ற அந்த பிரபல நடிகையிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதைதவிர கொள்ளையடித்த நகை, பணத்தை வேறு நடிகைகள் யாரிடமாவது முருகன் கொடுத்து வைத்திருக்கிறானா என்ற விசாரணையும் நடக்கிறது. ஆக மொத்தம், முருகனுடன் உல்லாசமாக இருந்த, மற்றும் தொடர்பில் இருந்த தமிழ், தெலுங்கு நடிகைகள் எல்லாம் இப்போது கிலியில் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications