எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம்! பாரிவேந்தருக்காக பஞ்சாயத்து செய்யும் அண்ணாமலை! தமிழக அரசு சொல்வதென்ன?
திருச்சி: திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள அரசு நிலத்தில் 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு மாத வாடகை செலுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலுக்கு சீல் வைத்த விவகாரத்தில் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு (டிடிசிசி) சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த 1994-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

குத்தகை காலம் நேற்று முன் தினத்துடன் நிறைவடைந்ததையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் குத்தகை காலம் நிறைவடைந்ததாக அன்று மாலை ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குத்தகை காலம் முடிவடைந்ததால் அந்த ஹோட்டலை கையகப்படுத்த அதிகாரிகள் அங்கு சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்கள், பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்துக்காகப், பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பான சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துன் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனத்திற்கு, கடந்த 1994-ஆம் ஆண்டில் 30 வருட காலத்திற்கு குத்தகை விடப்பட்டது. மேற்படி இடம் குத்தகைதாரருக்கு 14.06.1994 அன்று ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திடப்பட்ட இந்த குத்தகை ஒப்பந்தமானது கடந்த 13-6-2024 அன்றுடன் முடிவடைந்து விட்டது.
1994ஆம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணையின்படி, மேற்படி நிலத்திற்குச் சந்தை விலையின் அடிப்படையில், 7 சதவீதம் வருடாந்திர குத்தகைத் தொகை கணக்கிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 30 ஆண்டு காலத்திற்கு குத்தகைத் தொகை .47,93,85,941/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில், நாளது தேதி வரை குத்தகைதாரர் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் செலுத்திய தொகை ரூ.9,08,20,104/- மட்டுமே. மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.38,85,65,837/-ஐ குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை. இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகை தொகையைச் செலுத்தாமல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் தனது ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
குத்தகை ஒப்பந்தத்தில், மேற்படி நிலமானது 14.06.1994 முதல் 13,06,2024 வரையிலான 30 வருட காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் குத்தகைக் காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்தக்காரர் கோரக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குத்தகை முடியும் நாளில் குத்தகைதாரரால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு எவ்வித நிபந்தனையுமின்றி நிலம் மற்றும் கட்டடங்களை எவ்வித சேதாரமுமின்றி ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தின் சாராம்சத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நிலுவைத் தொகையை செலுத்த 02.05.2024 நாளன்று (ஒரு மாத காலத்திற்கு முன்பாக) குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், குத்தகைக் காலம் 13.06.2024 அன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரரால் நாளது தேதி வரை நிலுவைத் தொகை ரூ.38,85,65,837/- செலுத்தப்படாமல் இன்னும் நிலுவையாகவே உள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங்களில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குத்தகைக் காலம் முடிவடைந்ததாலும், குத்தகைதாரர் முறையாக, முழுமையான குத்தகைத் தொகையைச் செலுத்தாததாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படிதான் முறையான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.


-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம்












Click it and Unblock the Notifications